ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை (நாளை) அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.


கருணாஸ் உண்ணாவிரத போராட்டம்:


உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "அரை நூற்றாண்டுகளாக, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பசும்பொன்னில் அரங்கம் அமைத்திருந்தேன். அந்த அரங்கத்தை எந்தவித முன்னறிவிப்பின்றி காவல்துறை டிஎஸ்பி அகற்றியுள்ளார்.


கோரிக்கை:


இந்நிலையில் அரங்கம் வைக்கப்பட்டதன் கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரி, எனது சொந்த இடத்தில் பசும்பொன்னில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுத்துள்ளேன்" என முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.


தேவர் ஜெயந்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திடீரென முன்னாள் எம்.எல்.ஏ.வும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேவர் ஜெயந்தி:


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்டோபர் 30-ஆம் தேதியாகும். எனவே, சுதந்திர போராட்டம் உள்ளிட்ட சேவைகளை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


தேவரின் ஆன்மீக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.


பாதுகாப்பு தீவிரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 9ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் குருபூஜை நடைபெறுவதால் நவம்பர் 9 ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 9 ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் குருபூஜை நடைபெறுவதால் நவம்பர் 9 ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.


இந்நிலையில் பத்தாயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் 13 ட்ரோன் கேமிரா மூலம் தேவர் குருபூஜைக்கு வரக்கூடியவர்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு வரக்கூடிய பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும், வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்து வரக்கூடாது என தென்மண்டல ஐ.ஜி தெரிவித்தார்.


இந்நிலையில், திடீரென முன்னாள் எம்.எல்.ஏ.வும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: Udhayanidhi on Thevar Jayanthi: தேவர் ஜெயந்தி விழா : பசும்பொன்னிற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின்..!