பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த 2006 முதல் செயல்பட்டு வருகிறது. பல்வேறு விசயங்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வந்தது. குறிப்பாக சிறுபான்மையினர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, இஸ்லாமியர் ஒடுக்குமுறை என இஸ்லாமியர்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு முன் நின்றது. இந்நிலையில் கடந்த சில மாதமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் எம்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உள்ளவர்கள் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.  இதையடுத்து திடீரென இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. 



 

இந்நிலையில் மதுரை நெல்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் உமர்ஷெரிப் என்பவருக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் நேரில் ஆஜராகியிருந்தார்.  இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் உமர் ஷெரிப் வீடு அமைந்துள்ள நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் தெருவில் உள்ள வீட்டிற்கு இன்று காலை என்.ஐ.ஏ., அதிகாரிகள் உமரை அழைத்து வந்து சோதனை நடத்தினர். 




 

காலை முதல் 4மணி நேரம் தொடர்ந்து நடத்திய சோதனையின் முடிவில் அவரது வீட்டிலிருந்து வாள், வேல்கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை  என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் உமர் ஷெரிப்பை விசாரணைக்காக சென்னைக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் அழைத்துசென்றனர். ஆட்டோ ஓட்டுனர் உமர் நெல்பேட்டை பகுதியில் தனது வீட்டின் அருகே சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புகலை பயிற்சி வழங்கிவந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண