இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.






 

இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை இஸ்ரோ தரையிறக்கியது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த தரையிறக்குதல் நிகழ்வானது மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்றது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்த சந்திரயான் 3 திட்டம், விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் அல்ல யூடியூபிலும் பெரும் சாதனையை படைத்துள்ளது.




சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்குவதை யூடியூப் லைவில் மட்டும் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். இதற்கு முன்பு, ஸ்பேயின் நாட்டின் ஐபாய் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட லைவ்வை 34 லட்சம் பேர் பார்த்திருந்தனர். இதுவே உலக சாதனையாக இருந்தது. தற்போது, சந்திரயான் 3 லைவ்வை 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்ததன் மூலம் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 





 

நிலவின் தென்துருவத்தில் உலகன் முதன்முறையாக கால் தடம் பதித்த சந்திரயான் -3 தரையிரங்குவதை மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் நொடிக்குநொடி ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அரசு பள்ளி மாணாக்கர்கள் நேரலையை பார்த்தபோது நிலவில் சந்திரயான் -3 இறங்கியவுடன் உற்சாகமாக ஆரவாரமாக கைதட்டி கொண்டாடினர். தொடர்ந்து ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். சிட்டம்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சிவராமன்  சந்திராயன் 3 செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார். சந்திராயன் 3 நிலவில் தரையிறங்குவதை குழந்தைகள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கண்டுகளித்தனர். சந்திராயன் 3 நிலவில் தடம் பதித்த போது குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர். இந்நிகழ்வில் மங்களக்குடி ஆசிரியர் சரவணன், ஓடைப்பட்டி ஆசிரியர் மகாதேவன், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சந்திராயன் வெற்றிகரமாக திரையரங்கியதை தொடர்ந்து குழந்தைகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பொறுப்பு மாலா, ஆசிரியர்கள் மோசஸ், மெர்சி, ராஜேஸ்வரி செய்திருந்தனர்.

 



 

இதே போன்று முதன்முறையாக மதுரை மத்திய சிறைவாசிகள் சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கியதை நேரலையில் கண்டு களித்தனர் இதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த நிலையில் கைதட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர் இதேபோன்று மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள  மதுரை மீனாட்சி மெட்ரிகுலேசன  மேல்நிலைபள்ளியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் சந்திரயான்-3 நிலவில் தரையிறக்க பட்டதை கைதட்டி கைகளில் தேசிய கொடியை ஏந்தி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.