பேட்ஸ்மேன், பவுலர், பீல்டர் விநாயகர்கள் என பாப்பம்பட்டி கிரிக்கெட் டீம் சிலைகள், முருகப்பெருமான் மயில் வாகனத்தில் உலகை சுற்றிவரும் பொம்மை என ஏராளமான கொலுபொம்மைகளுடன் கூடிய வீட்டை பிரம்மாண்ட கொலுமண்டபமாக உருவாக்கி அசத்திய மதுரை தம்பதியினர்.

 

தமிழ்நாட்டில் கொலு பொம்மைகள்


 







Navratri 2024: இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி கொண்டாட பல புராணங்கள் கூறப்பட்டாலும் அம்பிகையை 9 நாட்கள் வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த 9 நாட்களும் அம்பிகை ஒவ்வொரு பெயரில், ஒவ்வொரு நிறத்தில் பக்தர்களால் வணங்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நாடு முழுவதும் நவராத்திர பண்டிகை கொண்டாட்டப்பட்டு வருகிறது. நவராத்திரி என்றாலே தமிழ்நாட்டில் கொலு பொம்மைகளை வைத்து வீடுகளில் பூஜை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 


பிரம்மாண்ட கொலு மண்டபமாக உருவாக்கி அசத்திய மதுரை தம்பதியினர்







மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சாய் பிரசாந்த் -அக்‌ஷயா தம்பதியினர் நவராத்திரியை முன்னிட்டு கடந்த 45 நாட்களாக தனது வீட்டை கொலுமண்டபமாக மாற்றி உள்ளனர். அந்த கொலுமண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி பிள்ளையார், சரஸ்வதி, லட்சுமி, தசாவதாரம், அறுபடை வீடுகள் என 9 படிகளிலும், 5 படிகளில் ஏராளமான கடவுள்களின் உருவ பொம்மைகளும் குழந்தைகளுக்கான பார்க், மளிகை கடைகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாரம்பரிய முறைகள் குறித்தான கொலு பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. 

 

பாப்பம்பட்டி கிரிக்கெட் அணி


தத்ரூபமாக கைலாயம் உருவாக்கப்பட்டதோடு மீனாட்சி அம்மன் கோயிலில் மாதிரி உருவாக்கி பிரம்மாண்டமாக கொலு வைத்துள்ளனர். மேலும், பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் பொம்மைகள் கிருஷ்ண லீலை, பிருந்தாவனம், பாண்டுரங்கன் கைகளில் இரு பஜனை பாடுபவர்களை வைத்திருப்பது  உள்ளிட்ட பொம்மைகளும், விநாயகர் பேட்ஸ்மேனாக, பௌலராக, ஃபீல்டராக இருந்து கிரிக்கெட்டு விளையாடுவது போல பாப்பம்பட்டி கிரிக்கெட்டின் என்ற பெயரிலான விநாயகர் சிலை பொம்மைகளும், முருகப்பெருமான் உலகத்தை சுற்றி மயில் வாகனத்தில் வருவது போலவும் தத்துரூபமாக உருவாக்கி பார்ப்பவர்களை கவரும் வகையில் கொலு மண்டபத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இதனை அவர்களது உறவினர்கள் அண்டை வீட்டார் உள்ளிட்டோர் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

கொலு பொம்மையால் மகிழ்ச்சி கிடைக்கிறது


இதுகுறித்து பேசிய திருமதி அக்ஷயா, நாங்கள் மூன்று ஆண்டுகளாக இதுபோன்று வீட்டினை முழுவதும் கொலு மண்டபமாக மாற்றி வைத்துள்ளோம். இதனை பார்ப்பதற்காக நவராத்திரியான ஒன்பது நாட்களிலும் சொந்தம், நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தரும்போது ஒருவருக்கொருவர் நன்கு பழகும் வாய்ப்பு கிடைப்பதாக தெரிவித்து மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். கொலு பொம்மைகளை எங்களது உறவினர்கள் குடும்பத்தினர் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள் இது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.