தென்மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீரை கொண்டு தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது.
Rajinikanth: முக்கியத் திட்டம்... நடிகர் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்..?
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியதால் அணையின் நீர்வரத்தான 9000 கன அடியில் தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு போக அணையை ஒட்டியுள்ள 13 மதகுகளில் 3 மதகுகள் வழியாக 534 கன அடி உபரி நீர் கேரளாவிற்கு திறக்கப்பட்டுள்ளது.
''புருஷனுக்காக அம்மாவை தெருவில விடமுடியாது''.. விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசிய மகேஸ்வரி!
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மத்திய நீர்வள ஆணையத்தின் ரூல்கர்வ் விதிமுறை அட்டவணையின் படி ஆகஸ்ட் 1 முதல் மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 137.50 அடி அளவில் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் தற்பொழுது உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துரையினர் தெரிவித்துள்ளனர்.
'திரைத்துறை ஒரு தங்கச்சகதி! என் தூக்கத்தின் விலை ரூ.2 லட்சம்' - மனம் திறந்து பேசிய வைரமுத்து!
நம்ம பூமியா இது? விதவிதமாய் வித்தியாசமாய் இருக்கே! நாசாவுக்குப் போட்டியாக ஈசா வெளியிட்ட போட்டோ!
இதனால் கேரளாவில் உள்ள பெரியாற்றின் நீரோட்டப்பாதையின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ ஆற்றில் இறங்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்