முல்லைப் பெரியாறு அணைக்கு தளவாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. ஆனால் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு அனுமதி எப்போது? என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், மற்றும் விவசாய தேவைகளுக்காக பயன்படும் முக்கிய அணையாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அனை பராமரிப்பு பணிகள் முழுவதும் தமிழக நீர்வளத்துறை செய்து வருகிறது. அணையில் வழக்கமாக நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்கு தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும்,
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
கேரள அரசின் தடையால் கடந்த ஏழு மாதங்களாக அணையில் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்ய முடியவில்லை. 2024 டிசம்பர் மாதத்தில் அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக நீர்வளத்துறை சார்பில் இரண்டு லாரிகளில் தளவாடப் பொருட்களைக் கொண்டு சென்றனர். வண்டிப்பெரியார் அருகே வள்ளக்கடவு சோதனை சாவடியில் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்து தமிழகத்திலிருந்து சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து தமிழக பகுதியில் விவசாயிகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
பின்னர் இரு மாநில உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின்பு 15 நாட்களுக்குப் பின் தளவாடப் பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து தளவாடப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் கொண்டு
சேர்த்த பின் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கின. அணையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகள், ஆய்வாளர் குடியிருப்புகளில் மட்டும் பராமரிப்பு பணிகள் செய்த போதிலும், மெயின் அணை பேபி அணை உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித பணியும் செய்ய அனுமதிக்கவில்லை.
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
குறிப்பாக பேபி அணை பலப்படுத்தும் பணிக்கும் இதுவரை அனுமதி இல்லை. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்திகள் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும் போது, தற்போது முல்லைப் பெரியாறு அணையை ஒட்டி அமைந்துள்ள ஆய்வாளர் மாளிகை மற்றும் குடியிருப்புகளில் கழிவு நீர் தொட்டியை பராமரிக்க மட்டுமே அனுமதி வழங்கி பணிகள் நடந்து வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பேபி அணை பகுதியில் செய்ய வேண்டிய 14 வேலைகளுக்கான அனுமதியை தருவதில் கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. பேபி அணையை விரைவில் பலப்படுத்திய பின் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.