இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், அவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையை வாசிக்காமலேயே வெளியேறிச் சென்றார். ஆளுநருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அதிமுக அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை குறிப்பிட்டு முழக்கமிட்டு வந்த சூழலிலும் ஆளுநர் பேரவையை விட்டு வெளியேறிவுள்ளார்.


கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல் சிலவற்றை சேர்த்தும் நீக்கியும் படித்தது சர்ச்சையானது. இந்த முறை உரையை வாசிக்காமலேயே புறப்பட்டு சென்றுள்ளர்