மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்திய கார்த்தி சிதம்பரம் எம்.பி.,
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பண சுவாமி கோயில் உள்ளது. இங்கு நேர்த்திக் கடனாக, 20 அடி அரிவாளை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் மாரநாடு கருப்பணசாமிக்கு 20 அடி அரிவாளை நேர்த்தி கடனாக அளிப்பதாக வேண்டியிருந்தார். இந்நிலையில் அதனை நிறைவேற்றும் விதமாக 20 அடி அரிவாளை மாநாடு கருப்பணசாமிக்கு வழங்கினார். அதில் 205664 வித்தியாசத்தில் வெற்றி வாக்கு எண்ணிக்கையும் பதிவிட்டு அரிவாள் வழங்கினார்.
செய்தியாளர் சந்திப்பு
பின்னர் கருப்பண்ண சுவாமியை தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், “சென்னையில் கார் ரேஸ் நடத்துவது ஒன்றும் தவறில்லை. இது போன்று நடத்தினால்தான் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும், வெளியில் உள்ளவர்களுக்கும் தெரிய வரும். நானே வந்து டென்னிஸ் போட்டி நடத்தி உள்ளேன். சென்னை டென்னிஸ் ஓப்பன் போட்டி நடந்துள்ளது. சென்னை பற்றி வெளியில் தெரிந்துள்ளது. செஸ் போட்டி சென்னையில் நடத்தியதெல்லாம் தெரியவந்தது. இந்த மாதிரி கார் ரேஸ் விளையாட்டு போட்டிகள் நடத்துவது வெளியில் தெரிய வரும். கார் ரேஸ் நடத்தப்படும் போது சாலைகள் சரி செய்யப்பட வேண்டும். விளையாட்டுப் போட்டி நடந்து முடிந்த பின்னரும் சாலை மக்களுக்கு பயன்படும். அதனை தொடர்ந்து அரசு சாலையை பராமரிப்பு செய்ய வேண்டும்.
ஆளுநர் தேனீர் விருந்தில் தமிழக முதல்வர் பங்கேற்றது குறித்த கேள்விக்கு!
அரசியல் ரீதியாக பங்கேற்கவில்லை என்றாலும், தமிழக முதல்வர் அரசாங்க ரீதியாக பங்கேற்றுள்ளார். முதல்வராக இருக்கும் போது அரசு கொள்கைகள்படி நடப்பது வரவேற்கதக்கது. அரசியல் வேறு, அரசுப் பணி வேறு என்பதை விளக்கியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
நடிகை குஷ்பு கட்சி தாவல் குறித்த கேள்விக்கு
குஷ்பு ஒலிம்பிக் வீராங்கனை, அவர் 4 வருஷம் திமுக, 4 வருஷம் காங்கிரஸ், பி.ஜே.பிக்கு வந்து நான்கு வருடம் ஆகிறதா? என்று தெரியவில்லை. ஒலிம்பிக் வீராங்கனை இப்போது தாவி உள்ளார். அவர் விஜய் கட்சிக்கு செல்கிறாரா? இல்லையா என்று தெரியவில்லை. அது அவரின் தனிப்பட்ட விருப்பம். ரயில்வே திட்டங்களுக்கு ரயில்வே அதிகாரிகளுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை. ரயில்வே போர்டுகளை அனைத்தும் எடுத்துக் கொள்கிறது. ஏற்கனவே இருந்த ரயில்வே அமைச்சரை அதே பதவியில் இருப்பதால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. சிந்தனையும் இருக்காது. மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறும் ரயில்வே எம்பிகள் கூட்டம் சம்பிரதாயமாக் நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - வரலட்சுமி நோன்பு, ஆடி மாத நிறைவு; 51 ஆயிரம் கண்ணாடி வளையல்களால் காட்சியளித்த தாயார்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - MS Dhoni Retirement: மறக்க முடியாத நாள்! சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட் பை சொன்ன கேப்டன்களின் கேப்டன் தோனி!