திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான குப்பம்மாள் பட்டி அருகே ஒட்டன்சத்திரம் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் இருந்த சோலை மரங்களில் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான அந்துப்பூச்சிகள்  பிரம்மாண்டமாக கூடாரம் கட்டி வருகின்றன. இதனை சாலையில் பயணிக்கும் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் ஆர்வத்துடனும், அதிசயத்துடனும் பார்த்து செல்கின்றனர்.




மேலும் இந்த அந்துப்பூச்சியின் பிரம்மாண்டமான கூடாரத்தை  இந்த பகுதி மக்கள் ராட்சத சிலந்தி வலை என்றும், அரிபூச்சி என்றும், மாறுபட்ட பெயர்களை கூறி வருகின்றனர். இதுகுறித்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பத்துறை பேராசிரியர் உஷா ராஜா நந்தினி கூறுகையில், “ இந்த பூச்சியின் அறிவியல் பெயர் பால் வெப் வாம் மோத் (FAUL WEB WARM MOTH) எனவும் தமிழில் அந்துப்பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அந்துப்பூச்சி கிழக்கு அமெரிக்காவை பூர்விகமாகக் கொண்டது. தற்போது ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் தற்போது தென்படுகிறது. 


Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!


இந்த பூச்சி மரத்தில் பரவினால் மரத்தில் உள்ள இலைகளின் அடியில் 500 முட்டைகள் இட்டு, மரத்தில் இருந்த இலைகளை அரித்து மரம் முழுவதும் சிலந்தி வலை போல் கூடாரம் அமைத்துவிடும். இதில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, நாளடைவில் கூட்டு புழுவாக மாறி அந்துப்பூச்சியாக  வெளிகிறது” என்று கூறினார்.


மேலும், ”இந்த பூச்சிகளின் கூடாரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே தென்படும். ஆனால் சாலையின் ஓரங்களில் அந்துப்பூச்சி கூடாரங்கள் தென்படுவதால் அருகில் உள்ள பழ மரங்கள் மற்றும் அலங்கார பூக்கள் கொண்ட மரங்கள் விவசாய நிலங்களில் உள்ள மரங்களில் பரவினால் மரம் முழுவதும் இலை இல்லாமல் பட்டுபோகும் சூழ்நிலை ஏற்படும். இதனை தீ வைத்து அழிக்காமல் அந்துப்பூச்சி கூடாரங்களை பாதுகாப்பாக விவசாயிகள் அப்புறப்படுத்த வேண்டும். இந்த பூச்சி மனிதர்கள் மீது பட்டால் அலர்ஜி ஏற்படும். ஆனால், வேறு பெரும் ஆபத்துகள் ஏற்படாது” என்றும் கூறினார்.




அந்துப்பூச்சியின் பிரம்மாண்டமான கூடாரத்தை, சாலையில் செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர். அத்துடன் பயணிகள் புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.


கொரோனா இரண்டாவது அலையால், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, மே மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறக்கப்பட்டன. இதனால், சாலையில் வாகனங்கள் செல்வது, மக்கள் நடமாடுவது இல்லாமல் இருந்தது. சாலையும் வெறிச்சோடி காணப்பட்டதால், அந்துப்பூச்சி பிரம்மாண்டமாக  கூடாரம் அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள்.


வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி