கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு  பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை அழகாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என் ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றனர். 8-ம் கட்ட அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

 


இந்நிலையில் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஏழாம் கட்ட அகழாய்வுப் பணி நடந்த இடத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் கல்வியில் பின் தங்கிய பகுதியில் இருந்து 4அரசு பள்ளிகளை தேர்வு செய்து அதில் பயிலும் 70மேற்பட்ட மாணவ மாணவிகளை கீழடிக்கு வரவழைத்து கீழடி அகழாய்வு பற்றி விளக்கம் அளித்து கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தற்போது நடந்து வரும் கீழடி 8ம்கட்ட அகழாய்வுப் கண்டுபிடிக்க பட்ட சில பொருட்களை காட்சிப் படுத்தி இதன் பயன்பாடு குறித்து தொல்லியல் துறையினர் மாணவ மாணவிகளுக்கு ‌எடுத்துக் கூறினார்கள். நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் வெளி மாவட்ட நபர்கள் பார்வையிட கூட்டம் கூட்டமாக கீழடிக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்.