மதுரையில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி வீடியோ பதிவு செய்து மிரட்டியதாக பள்ளி ஆசிரியை மற்றும் கள்ளகாதலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகர் பகுதியில் வசிக்ககூடிய 45 வயதுடைய பள்ளி ஆசிரியை ஒருவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் தனியாக வீடு பிடித்து வசித்து வருகிறார். கடந்த 2010- ம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துவந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020- ம் ஆண்டின்போது ஆசிரியை மற்றும் கள்ளக்காதலனான வீரமணி ஆகிய இருவரும் இணையதளத்தின் மூலம் ஆபாச வீடியோக்களை பார்க்க தொடங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆபாச வீடியோக்களில் இருப்பதுபோன்று தவறான உறவினை மேற்கொள்ள ஆசைப்பட்டு தன்னிடம் டியூசன் பயிலவரும் இரு மாணவர்களிடமும் சேர்ந்து இருக்க நினைத்துள்ளனர். இதையடுத்து மாணவர்களுடன் ஆபாசமாக இருப்பதை போன்று புகைப்படம் அதனை காட்டி மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்திய அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் வீரமணி தனது நண்பர் ஒருவருக்கு வீடியோவை காட்டியபோது அதில் இருந்த மாணவர்கள் குறித்து வீரமணியின் நண்பர் மாணவர்களை தொடர்புகொண்டு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் வீரமணியிடம் ஏன் வீடியோவை வெளியிட்டீர்கள் என கேட்டபோது இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க - விவசாயத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க 30 ஆயிரம் லஞ்சம்- உதவி மின் பொறியாளரை கைது
இதனால் அச்சமடைந்த மாணவர்கள் கரிமேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி செல்போனை ஆய்வு செய்ததில் வீடியோ அனைத்தும் இருந்துள்ளது. இதனையடுத்து புகார் உண்மை என்பது தெரியவந்த நிலையில் வீரமணி மற்றும் ஆசிரியை மீது மதுரை மாநகர தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு வீரமணி மற்றும் ஆசிரியை கைது செய்தனர்.
பள்ளி ஆசிரியை கள்ளகாதலனுடன் சேர்ந்து தனது மகனையும் மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கொடூரமும் நடைபெற்றுள்ளது. காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் - மதுரை நீதிமன்ற நீதிபதிகள் கருத்து