பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாணவர்கள் மே 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

நடைபெறவுள்ள ஜூன்‌, ஜூலை 2024 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வுகளுக்கு மார்ச்‌ 2024 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும்‌, விண்ணப்பிக்கத் தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும்‌, இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌

Continues below advertisement

பிளஸ் 2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள்‌, தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும்‌ எழுத அவர்கள்‌ பயின்ற பள்ளிக்கு நேரில்‌ சென்று 16.05.2024 ( வியாழக்‌ கிழமை) முதல்‌ 01.06.2024 (சனிக்‌ கிழமை ) வரையிலான நாட்களில்‌ ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11 மணி முதல்‌ மாலை 5.௦௦ மணிக்குள்‌ விண்ணப்பிக்கவேண்டும்‌.

தனித்தேர்வர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌

மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியுள்ள தனித்தேர்வர்களும்‌ மற்றும்‌ மார்ச்‌ 2024 மேல்நிலை முதலாம்‌ ஆண்டு / மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும்‌ 16.05.2024 (வியாழக்‌ கிழமை) முதல்‌ 01.06.2024 (சனிக்‌ கிழமை ) வரையிலான நாட்களில்‌ ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல்‌ மாலை 5.00 மணிக்குள்‌ கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள்‌ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

விண்ணப்பங்களை ஆன்‌-லைனில்‌ பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள் சேவை மையங்களின்‌ (Government Examinations Service Centres) விவரங்கள்‌ மற்றும்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்தல்‌ குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும்‌ அறிவுரைகள்‌ ஆகியவற்றை www.dge.tn.gov.in

என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்துகொள்ளலாம்‌.

மேலும்‌, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌, அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌ மற்றும்‌ அனைத்து அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகங்கள்‌ வாயிலாகவும்‌ அறிந்து கொள்ளலாம்‌.

தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும்‌ ஆன்‌-லைன்‌ பதிவுக்‌ கட்டணத்தினை சேவை மையத்தில்‌ /பள்ளியில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.

தேர்வு தேதிகள்

கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in