தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாரத்தான் போட்டிகள், சிலம்பாட்டம், யோகா, பரதநாட்டியம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஹாப்பி சண்டே நிகழ்சியில் சிறுவர் முதல் பெரியவர் வரை 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Lokesh Kanagaraj: “விஜய் கெட்ட வார்த்தை பேச நான் தான் காரணம்” .. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்..!


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினர் மற்றும் பெரியகுளம் விளையாட்டுக் கழகம் சார்பில் ஹாப்பி சண்டே நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் நடைபெறுவது போன்று இல்லாமல் உடற்பயிற்சி, கலை, யோகா, பரதம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்தும் கொடுக்கும் விதத்தில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல் வாரமான இன்று காலை 6 மணிக்கு முதலில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன.


IND vs AUS, World Cup 2023: அனல் பறக்கப்போகும் உலகக்கோப்பை போட்டி.. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்..!


இந்த மாரத்தான் போட்டிகள் 6 வயது முதல் 13 வயது வரை ஒரு பிரிவிலும், 14 வயது முதல் 18 வயது உடைய சிறுவர்களுக்கு தனியாக ஒரு பிரிவும், காவல்துறைக்கு தனியாக ஒரு பிரிவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தனியாக ஒரு பிரிவும் என 4 பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. 


இந்த போட்டியில் பெரியகுளம், அதனைச் சுற்றி உள்ள பகுதியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பரதம், யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.




மேலும் ஹாப்பி சண்டே நிகழ்ச்சியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே துவக்கி வைத்தார். உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.