கீழடியில் -7ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தி.மு.க அமைச்சர்கள் கீழடியில் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழடியை போல் தொல்லியல் எச்சம் கிடைக்கும் எல்லா  இடங்களிலும் அகழாய்வு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்த தொழில்துறை மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம்....,"  கீழடியில் வெள்ளியிலான முத்திரை காசு கிடைக்கப்பெற்றது. அந்தக் காசு 14 செ.மீ கீழே கிடைக்கப்பெற்றுள்ளது. அது கி.மு 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்போதைய நாணய பரிமாற்றம் நடைபெற்றது என்பதற்கான சான்றாக உள்ளது. 

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் அகழாய்வு மூலம் நமக்கு பல தகவல்கள் தமிழில் வரலாற்றை உணர்த்தி வருகின்றன. இத்தனை சான்றுகள் கிடைத்தாலும் அதனை ஏற்க சிலருக்கு மனம் இல்லை இன்னும் சொல்லப்போனால் தமிழின் பெருமை தமிழர்களின் பெருமை உலகளாவிய ஒரு சிலருக்கு வயிறு எரிகிறது. அவர்களுக்கு வயிறு இருந்தாலும் கவலை இல்லை. நாங்கள் தொடர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டு தமிழின் பெருமையையும் தமிழர்களின் பெருமையையும் உலகளாவிய அளவில் வெளிக்கொண்டு வருவோம்”.

 



தமிழ் கலாச்சாரத்தை பற்றி துக்ளக் நாளிதழில் வந்த செய்தி  தொடர்பான  கேள்விக்கு அவர் மட்டுமல்ல யாராக இருந்தாலும் தமிழ் வளர்ச்சிக்கு எதிராக பேசினால் அது கண்டிக்கத்தக்கது பண்பாட்டுச் சூழலை வெளிக்கொண்டு வர  முன்னெடுத்துவரும் முயற்சிகளை கொச்சைப் படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட கூடியவர்கள், தமிழ்நாடு அரசு மட்டுமல்ல தமிழ்நாடு அரசாங்கம் மட்டுமல்ல ஒவ்வொரு தமிழர்களுக்கும் உணர்வு உண்டு. மதுரை மாவட்டம் பேரையூர், கல்லுப்பட்டி பகுதிகளில் கீழடி போன்ற வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து வருகின்றது அங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என  தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பேரையூர் கல்லுப்பட்டி மட்டுமல்ல சமவெளி நாகரிகம் எங்கு எங்கு இருக்கிறதோ அந்தப் பகுதியை எல்லாம் நிச்சயமாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு தமிழரின் பெருமை வெளிக்கொண்டு வரப்படும்.



எங்கெங்கு ஆய்வு மேற்கொள்ளலாம் என்று ஆலோசித்த பிறகு தங்கள் ஆய்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். உலகப்பொது மறையாக இருக்கக்கூடிய திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.  உலகெங்கும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு அறிக்கைகளை உருவாக்கி அதன் வாயிலாக தமிழாய்வுகள் கடல் கடந்து தேசங்களில் உள்ள நாடுகளிலும் பெருமளவு நடைபெறுவதற்கான தமிழரின் பெருமையை தெரிந்து கொள்வதற்காகவும் திட்டங்களை செயல்படுத்த தமிழ் வளர்ச்சித் துறைக்கு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்”. என தெரிவித்தார்.