எந்த கடையில் பாதுகாப்பற்ற முறையில் விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இறைச்சியை பதப்படுத்தாமல் பயன்படுத்துவது தான் விஷமாகும். எங்க தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடைபெறும். - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
உடல் உறுப்பு தானம் செய்து உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதன்படி தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது,” இனிமேல் உடல் உறுப்பு குடை கொடுப்பவர்களுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இனி உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும் பணி நடைபெறும்.
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அதிமுக - பாஜக இடையே மோதல் குறித்த கேள்விக்கு ; ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும் என உதயநிதி பதில்
மதுரையில் டெங்கு பரவல் அதிகம் குறித்த கேள்விக்கு
மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பும் பாதிப்பு இருக்கும். அனைத்துதுறை செயலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2012 இல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 2017இல் 23,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர், 65 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 476 மருத்துவக் குழுக்கள், 805 நடமாடும் பள்ளி மருத்துவ குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும் வருகிற 1 ஆம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நான்கு மணி வரை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
உணவு பாதுகாப்பு துறை சார்பாக பெரிய உணவகங்களை தவிர சிறிய உணவகங்களில் மட்டுமே சோதனை நடைபெறுகிற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு
எந்த கடையில் பாதுகாப்பற்ற முறையில் விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இறைச்சியை பதப்படுத்தாமல் பயன்படுத்துவது தான் விஷமாகும். எங்க தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடைபெறும்.
மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு:
தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் கட்டடத்தை பார்க்காமலே படிப்பை முடிக்க உள்ளனர். செய்தியாளர்கள் கேட்டதற்கு இதனை ஒன்றிய அரசிடம் தான் கேட்க வேண்டும் என கூறி சென்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!