அதிமுக - பாஜக இடையே மோதல் குறித்த கேள்விக்கு ; ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும் என உதயநிதி பதில்

நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் திமுக உடைய நோக்கம்.

Continues below advertisement

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்பு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொடர்ந்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் போது பார்வையிட்டு வருகிறேன்.

Continues below advertisement


தற்போது அலங்காநல்லூர் அருகே கீழக்கரைப்பகுதியில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. 44 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டு இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 67 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் வளாகம் மட்டும் 16 ஏக்கர் ஆகும். இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் முகப்பு வளைவுகள், வீரர்கள் காத்திருக்கும் இடம், உடல் பரிசோதனை மையம், அவசர சிகிச்சை மையம், தடுப்புச் சுவர், ஓய்வு அறை, பிரஸ் கேலரி, அருங்காட்சியகம் உள்ளிட்டவை வரவிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தின் பணிகள் ஜனவரிக்குள் முடிந்து வரவிருக்கக்கூடிய தை மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் திமுக உடைய நோக்கம்.

- Vinayagar Chaturthi 2023: மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு 18படி அரிசியில் கொழுக்கட்டை படைத்து சிறப்பு வழிபாடு


இதற்காக 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை கையெழுத்து பெறப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். நீட் விவகாரத்தில் சட்டப் போராட்டம் செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக நடைபெற்ற மக்கள் போராட்டம் போல் நீட் தேர்விற்கு போராட்டம் நடைபெற வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். நம்மளுடைய அமைச்சர்களும் டெல்லி சென்று அதற்கான பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் " என்றார்.


முன்னதாக மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஜைக்கா நிதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,” அதிமுக பாஜக இடையே ஏற்படும் பிரச்சனை குறைத்து கேட்டதற்கு இதெல்லாம் நாடகம் எல்லாம் எல்லாரும் காமெடி பீசு தான். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு இப்போது தான் டெண்டர் விடப்பட்டுள்ளது அங்கு போய் பாருங்கள் செங்கல் மட்டும் தான் இருக்கும் எய்ம்ஸ் குறித்து ரகசியத்தை சொல்லுங்கள் என கேட்டுள்ளேன். அதிமுக பாஜக இடையே உக்கட்சி பூசல் அவர்கள் ஓப்பனாகவே மிரட்டுகின்றனர். இப்போது ஆய்வு செய்துள்ள மருத்துவமனை கொரோனா காலகட்டத்தினால் தாமதமாகியுள்ளது. அக்டோபர் மாதம் முழுமையாக முடிவடைந்து விடும் விரைவில் திறக்கப்படும் என கூறினார். மேலும் அதிமுக பாஜக இடையே உட்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. இதைப்பற்றி பேசக்கூடாது என கூறியுள்ளார். ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Minister Udhayanidhi Stalin : சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடுமா? : நம்புங்கள்.. ஒழிந்துவிடும்.. பதிலளித்த அமைச்சர் உதயநிதி

மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்.." மதுரையில் பா.ஜ.க. ஒட்டிய போஸ்டர்..! குவியும் கண்டனம்..!

Continues below advertisement