புலிகள் போல் தலைவர்கள் இருக்க!!!  புலிகேசியின் ஆதரவு எதற்கு !!! போடுடா வெடிய அதிமுகவை சீண்டி பாஜகவினர்  ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

 

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது:


அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதனால், அதிமுக கூட்டணயில் பாஜக இல்லை என்று அதிமுக தலைவர்கள் கூறிக் கொண்டு வந்தனர். தொடர்ந்து இது குறித்து  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை  அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தே ஆக வேண்டும். அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறியதாக தெரிகிறது. 




இதனை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு,  2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதை அதிமுக தொண்டர்கள் அந்தந்த பகுதியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 




 




அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் இனி எந்த காலகட்டத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்தது இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினரும் பாஜகவினரும் மாறி மாறி பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் மதுரையில் பாஜக சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டர்களில் போர்க்களம் கொண்ட காவி படைகள் இருக்க !! சனாதனம் தாங்கி பிடிக்க மக்கள் இருக்க!! புலிகள் போல் தலைவர்கள் இருக்க புலிகேசியின் ஆதரவு எதற்கு? என்ற வசனங்களுடன் அச்சிடப்பட்ட போஸ்டர்களை மதுரை மாநகர் முழுவதிலும் அச்சிட்டு ஒட்டியுள்ளனர்.



 

 மேலும் KING MAKER- PURATCHI TAMILAR என எடப்பாடி பழனிச்சாமி படத்துடன் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்களின் அருகிலேயே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதில் அண்ணாமலை மோடியின் படங்கள் இடம்பெற்றுள்ளது. அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அருகிலயே தேடி தேடிசென்று புலிகேசி என்று அச்சிடப்பட்ட போஸ்டர்களை பாஜகவினர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பட்டாசு வெடிப்பதில் தொடங்கி தற்போது போஸ்டர் யுத்தமாக மாறியுள்ளது.