”உங்க காலத்துல எதாயவது செஞ்சு முத்திரை பதிங்க மேயர்” என பெண் மேயருக்கு அட்வைஸ் செய்த செல்லூர் ராஜூ
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ - அமைச்சர் பி.மூர்த்தி
மதுரை செல்லூர் கட்டபொம்மன் நகரில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அதே பகுதியில் மற்றொரு தெருவில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தளபதி , மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகராட்சி , மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் வந்தனர். அப்போது நேரடியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும், அமைச்சர் மூர்த்தியும் சந்தித்துகொண்டனர்.
அப்போது வாங்கண்ணே என இருவரும் ஒருவரை வரவேற்றனர் பின்னர் பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் முழுவதும் செல்கிறது.
திட்டம் ஒதுக்க செல்லூர் ராஜூ கோரிக்கை
அப்போது ”எங்க ஆட்சி காலத்தில்” என செல்லூர் ராஜூ சொல்ல தொடங்கியவுடன் அமைச்சர் மூர்த்தி செல்லூர் ராஜூவிடம் ”இருங்க” என கூற நான் சொல்றத கேளுங்க தலைவரே என அமைச்சர் மூர்த்தி சொல்ல, இருவரும் மாறி மாறி தலைவரே தலைவரே என மாநாடு பட ஸ்டைலில் பேசிக்கொண்டனர். பின்னர் செல்லூர் ராஜூ ”தான் அரசியலுக்காக சொல்லவில்லை உண்மையிலேயே சொல்கிறோம். மீனாம்பாள்புரத்தில் 3 ஷட்டர்கள் அமைத்து உபரிநீரை வெளியேற்றி வந்தோம் அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் விட்டுவிட்டோம் என கூறிவிட்டு, ”உங்கள் முதல்வர் திட்டத்தின் கீழ் 86 கோடி ரூபாயில் தூர்வாருங்கம்மா...,” என கூறிவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் 86 கோடி ரூபாயை கேளுங்க மா என கூறினார்.
அப்போது அதற்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்தபோது அந்தப் பக்கம் தோண்டிக்கிட்டு இருக்காங்க பாருங்க என்று பதிலளித்தார்.
அமைச்சர் மூர்த்தி
நமக்கெல்லாம் வாழ்வு கொடுத்த பெரியார் தெருப்பா... அங்க இடுப்பளவு தண்ணி இருக்குப்பா..., என குறையை சொல்ல அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையாளர் பருவ மழை முதல் நாளில் இருந்து நான் இந்தப் பகுதியில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்ததற்கு ”கமிஷனர் இருக்கீங்க ஆனா தீர்வு வேண்டும்ல” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்ல பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ”விடுங்க விடுங்க அண்ணே நீங்க என்ன சொல்றீங்களோ அதை செஞ்சுருவோம்” ”நைட்டுக்குள்ள கிளியர் பண்ணிருவோம்” என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியரை பார்த்து ”எல்லாருக்கும் பாதிப்பு இல்லாதவாறு நல்லா நிவாரணம் கொடுங்கம்மா” என கூறியதோடு, மாநகராட்சி மேயர் இந்திராணியை பார்த்து ”எதாவது செய்யுங்க மா உங்க காலத்துல ஏதாவது செஞ்சோம் என முத்திரை பதிங்க மேயர்” என செல்லூர் ராஜூ கூறியபோது MLA தளபதி வாங்கண்ணே வாங்கண்ணே போவோம் என கூறி அழைத்து சென்றுவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை ஆலங்குளம், செல்லூர் கண்மாய் மற்றும் பந்தல்குடி கால்வாய் நிரம்பி தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TVK Maanadu: அதிமுகவுக்கு நடந்தது நமக்கு நடக்கக் கூடாது.. உணவு விஷயத்தில் விஜய் செய்தது என்ன ?