மதுரையில் கனமழை

 

மதுரை மாநகரில் நேற்று மதியம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக திடீரென கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை  வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியான ஆலங்குளம், செல்லூர் கண்மாய்கள் நிரம்பி பந்தல்குடி கால்வாய்களில் நரம்பியது இதனால் நேற்றிரவு முதல் நீர் நிரம்பி தெருவுக்குள் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதன் காரணமாக முல்லைநகர், செல்லூர், 50 அடி ரோடு, கட்டபொம்மன் நகர், நரிமேடு, பந்தல்குடி, குடியிருப்பு பகுதிகள் முழுவதிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் அவசர அவசரமாக உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர். பந்தல்குடி கால்வாயில் இருந்து வெளியேறக்கூடிய நீர் ஒவ்வொரு வீடுகளில் முன்பாக முழங்கால் அளவிற்கு சிறு வெள்ளம் போல பெருக்கெடுத்து மழை நீர் ஓடுகிறது. செல்லூர் மற்றும் தத்தனேரி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியதோடு நரிமேடு பகுதியில் அமைந்துள்ள 3க்கும் மேற்பட்ட பள்ளிகள் நீரில் மூழ்கியதோடு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் நீரில் மூழ்கியது. மதுரை செல்லூர் முல்லைநகர் நரிமேடு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர்.


 

மழை நீரை விரைவாக அகற்றுவதற்கு போர்க்கால அடிப்படைகள் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன









 

மதுரையில் ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி...,” மதுரையில் கடந்த தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் (25.10.2024) மட்டும் ஒரே நாளில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மிக கனமழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மாநகரக்குட்பட்ட சில தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. நேற்று மாலையிலிருந்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, மாநகராட்சி நிர்வாகம் என மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறை அலுவலர்களும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

 

அடிப்படைகள் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன

 

மழைநீர் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் 1000 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று தங்கினர். இரண்டு இடங்களில் மட்டும் தலா 35 வீதம் மொத்தம் 70 நபர்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பால், உணவு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை விரைவாக அகற்றுவதற்கு போர்க்கால அடிப்படைகள் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.