Russia Ukraine War: உக்ரைனில் இருந்து மதுரை திரும்பிய மாணவிகள் - சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மூர்த்தி

உக்ரைனில் போரினால் சிக்கி , மேலூர் வந்தடைந்த மருத்துவ மாணவி யாஷிகா தேவியை பத்திரப் பதிவுத் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில்  சந்தித்து  ஆறுதல்

Continues below advertisement

மதுரை  மாவட்டம்  மேலூர் கருத்தபுலியம்பட்டியை சேர்ந்த மருத்துவ  மாணவி  யாஷிகாதேவி  உக்ரைன் நாட்டில்  கார்க்யூ  பகுதியில்  அமைந்துள்ள  மருத்துவ  பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு  மருத்துவம்  பயின்று வருகிறார்.

Continues below advertisement


இந்நிலையில்  ரஷ்யா - உக்ரைன்  போர்  காரணமாக தமிழ்நாடு  மாணவர்கள்  உட்பட பல இந்தியர்கள்  உக்ரைனில் சிக்கித்  தவித்தனர். உக்ரேனில் சிக்கியிருந்த இந்திய மாணவ மாணவிகளை மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மாணவ , மாணவிகளை  மீட்டு வருகின்ற நிலையில், உக்ரேனில் சிக்கி தவித்த மருத்துவ மாணவி யாஷிகா தேவியை பாதுகாப்புடன் மீட்டுத்தர வேண்டும் என மாணவியின் குடும்பத்தினர் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். சம்பந்தப்பட்ட மாணவியின் குடும்பத்தினரிடம் கடந்த 22 ஆம் தேதி வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறிய அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் மாணவியை மீட்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறி இருந்தார். இந்த நிலையில் மத்திய, மாநில அரசு  முயற்சியால் மாணவி  மீட்கப்பட்டு சொந்த ஊரான மேலூர் கருத்தப்புளியன்பட்டிக்கு திரும்பியதை தொடர்ந்து மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரை வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் நேரில்  சந்தித்து ஆறுதல்  கூறினார்.


 
மேலும்  உக்ரைன்  நாட்டில்  உள்ள நிலவரம்  குறித்தும்  அங்கு சிக்கி உள்ள மற்ற மாணவர்கள்  குறித்தும்  கேட்டறிந்தவர் , மாணவி யாஷிகாதேவியை எல்லாவற்றையும்  மறந்து  தைரியமாக இருக்கும்படி  ஊக்கப்படுத்தியதுடன்.   யாஷிகாதேவி  உள்ளிட்ட  பாதிக்கப்பட்ட  பல தமிழ்  மாணவர்கள்  இங்கே  மருத்துவம் படிக்க  தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுக்கும் என அமைச்சர் மாணவியிடம் தெரிவித்தார். 
 
 
Continues below advertisement