மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்த  சத்திர வெள்ளாளப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற்றது. அத்துடன் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணையும் நிகழ்ச்சிக்கு எற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமானம் மூலமாக மதுரை வந்து அங்கிருந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறார். இதற்காக மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் மாவட்ட பாஜகவினரால் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது. அதில் சுதந்திர போராட்ட வீரார் நேதாஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தற்போதைய தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் "இன்றைய நேதாஜியே எங்களின் அண்ணாமலை ஜீ யே”- என  பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை நேதாஜியுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

 

 


இந்நிலையில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியை முடித்த அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்...,” புதிதாக எந்த விஷயத்தையும் செய்யாமல், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஆவினில் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய பொருட்களுக்கு விலையை உயர்த்திவிட்டு, தற்போது டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலையை உயர்த்தி விட்டனர். அதில் வரும் 2ஆயிரம் கோடியை வைத்து தான் அரசாங்கத்தை நடத்த இருப்பதாகவும் கூறுகின்றனர். மோசமான முன்னுதாரணமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சி செய்கிறது என்பது தெரிகிறது. அடுத்து வருகின்ற தமிழக பட்ஜெட்டில் மிகப்பெரிய விலை உயர்வு வரி உயர்வு மட்டும் தான் காண முடியும்.






இதையெல்லாம் பார்க்கும் போது இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பொருளின் விலையையும் திமுக அரசு உயர்த்தும் என்பதற்கு முன்னோட்டமாக தான் இதனை செய்து வருகிறது.புதிதாக எந்த சிந்தனையும் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்து கொண்டுள்ளது. நாளை மார்ச் 10ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு பாஜக பதில் அடி கொடுக்கும் வகையில் இருக்கும் ஐந்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும். உக்ரைனில் இருந்து தமிழகம் வரும் மாணவர்களின் கோரிக்கைகள் எந்தவிதமான கோரிக்கைகளாக இருந்தாலும் மத்திய அரசு அதை பரீசிலிக்கும். பிரதமர் மோடியின் முழு பிரயத்தனம் நூறு சதவீதம் இந்திய மாணவர்களை முழுமையாக மீட்க வேண்டும் என்பது தான். மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட பிறகு மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இருக்காது. விலை உயர்வு, வரி உயர்வு மட்டுமே தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இருக்கும்” எனக் கூறினார்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - watch video | மதுரை மேலூர் அருகே கோலாகலமாக நடந்த மீன்பிடித் திருவிழா - கூட்டம் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்