பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கியதுடன், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விபர அறிவிப்பு இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமூகநீதிக்கு எதிரான இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் அரசு வழக்கறிஞர் இறுதி வாதம் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அருண் (யுவராஜின் கார் ஓட்டுநர்), குமார் (எ) சிவக்குமார், சதீஸ்குமார், ரகு (எ) ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, கிரிதர் ஆகிய 10பேரையும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் 10பேருக்கான தண்டனை அறிவிப்பு இன்று வழங்கவுள்ள நிலையில் மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் 10பேரும் அழைத்துவரப்பட்டனர்.
நீதிமன்றத்திற்கு வருகை தந்த பின்னர் குற்றவாளிகள் மற்றும் கோகுல்ராஜ் தரப்பு ஆகியோரிடம் நீதிபதி் சம்பத்குமார் வழக்கு குறித்து கருத்து கேட்டபோது; குற்றவாளிகளான யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தாங்கள் நிரபராதி எனவும், எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் தெரிவித்தனர்
கோகுல்ராஜின் தாயார் சித்ரா கூறியபோது, தன் மகனுக்கு நேர்ந்தது போன்ற கொடுமை யாருக்கும் நடக்ககூடாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற இறுதி வாதத்தின் போது பேசிய அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன், கோகுல்ராஜ் கொலை முன்கூடியே திட்டமிடப்பட்டு கொடுமையாக நடைபெற்றுள்ளது, கோகுல்ராஜ் தற்கொலை செய்தது போல ஜோடிக்கப்பட்டுள்ளது, சமூகத்தில் பின்தங்கிய பட்டியலின இளைஞருக்கு நடந்த இந்த சம்பவம் கொடுமையானது இது கோகுல்ராஜுக்கு எதிரானது அல்ல; சமூகத்திற்கும், சமூக நீதிக்கு எதிரானது எனவே குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் என்றார்.
இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி் வழக்கின் தண்டனை விபரங்கள் குறித்த அறிவிப்பை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரசு வழக்கறிஞர் பவானி.பா.மோகன் ”கோகுல்ராஜின் தாயார் சித்ரா நீதிபதியிடம் கருத்து தெரிவித்த போது அதிகபட்ச தண்டனையாக தூக்குதண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்., இந்த வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கின் வழிகாட்டுதல்களை குறிப்பிட்டுள்ளோம், கோகுல்ராஜை கழுத்தை அறுத்த நாக்கை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டுள்ளோம் இதனையடுத்து பிற்பகலுக்கு தண்டனை அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - watch video | மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு