மதுரையில் சர்வதேச ஆண்கள் தின விழாவை உற்சாகமாக ஒரே நிற புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்து கொண்டாடிய மின்வாரிய ஊழியர்கள்.

 


விலங்குகள் தினம் போன்ற வரிசையில் ஆண்கள் தினமும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு நிகராக ஆண்கள் இருக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளதால், ஆண்கள் தினத்தை கொண்டாடிவருகிறோம். ஒரே சீருடையில் கொண்டாடுவது பள்ளிப்பருவ மகிழ்ச்சியை தருகிறது என பணியாளர்கள் தெரிவித்தனர்.

 


 


 


International Men's Day 2024:


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்களின் உடல்நலன் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், சமூக பொருளாதார மாற்றங்களில் ஆண்களின் பங்கு அதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘சர்வதேச ஆண்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுவதோடு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவிப்பர். ஆனால் பெண்கள் தினம் போல கொண்டாடப்படும் ஆண்கள் தினமும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஆண்கள் தினமும் கொண்டாட்டங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி தேசிய ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

 


 

மதுரை ஆண்கள் தினம் கொண்டாட்டம்



 

இதனை முன்னிட்டு மதுரை புதூர் தாமரைத் தொட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஒரே மாதிரியான வண்ணத்தில் புத்தாடை அணிந்துவந்து உற்சாகமாக கொண்டாடினர். அப்போது ஒருவருக்கு ஒருவர் ஆண்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு ஆரத் தழுவியும், முத்தமிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு, ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கியதோடு மதிய உணவு வகைகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். அப்போது பெண் உயரதிகாரியிடம் ஆண் பணியாளர்கள் இனிப்பு கொடுத்தபோது, ”ஆண் பெண் இருவரும் தண்டவாளம் போல செயல்பட வேண்டும். பெண்களின் தியாகம் போற்றப்படும். ஆனால் ஆண்களின் தியாகம் பேசப்படாது, பாடப்படாத ஹீரோக்கள்” -  என கூறி வாழ்த்தினார். இதனைத்தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தின் முன்பாக நின்று ஒரே மாதிரியான கைத்தறி ஆடைகளை அணிந்து குழுப்புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

 

ஒரே சீருடையில் கொண்டாடுவது பள்ளிப்பருவ மகிழ்ச்சியை தருகிறது


 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்வாரிய ஊழியர்கள்...,” பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கான உரிமையை  தினமும் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு நிகராக ஆண்கள் இருக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளதால் ஆண்கள் தினத்தை கொண்டாடிவருகிறோம், ஒரே சீருடையில் கொண்டாடுவது பள்ளிப்பருவ மகிழ்ச்சியை தருகிறது” என்றனர்.