மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார். மூன்று வேலை உணவுகள் அளித்து மீண்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்திலேயே அழைத்து வந்தார்.


தொழிலாளர் போராட்டம்


முன்பு, உலக அளவில் எடுத்து கொண்டாலும் தொழிலாளர்கள் பல மணி நேரம் உழைத்தனர். இதனால், அவர்கள் சொந்த விசயங்களை கூட கவனிக்க முடியாத நிலை இருந்தது. சில இடங்களிகளில் 16 மணி நேரம் கூட வேலை இருந்ததாக வரலாற்று நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தொழிற்புரட்சி ஏற்பட்ட 18 ஆம் நூற்றாண்டுகளில் தொழிலாளர்களின் உழைப்பானது சுரண்டபட்டது என்றே சொல்லலாம். அவ்வப்போது சில இடங்களில் அங்கும் இங்குமாக தொழிலாளர்கள் உரிமை குறித்து போராட்டங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் போராட்டமானது பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்தது.  இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ்  உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சி உத்வேகம் அடைய ஆரம்பித்தது. 1886-ம் ஆண்டு அமெரிக்காவின், சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அப்போராட்டத்தில் காவல்துறையினரால், தொழிலாளர்கள் பெரும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். இதையடுத்து, 1889 ஆம் ஆண்டு பாரீசில் சர்வதேச தொழிலாளர் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 8 மணி நேர வேலை, மே 1 தேதி முதல் உலகளாவிய தொழிலாளர் தினம் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 1923 ஆம் ஆண்டுதான் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அதுவும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது.


மே தின கொண்டாட்டம்



இந்நிலையில் மே தினமான நேற்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடினர். மேலும் அரசு நிறுவனங்கள் அரசு சார்பு நிறுவனங்கள் தனியார் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தை கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் இயற்கை விவசாயத்தை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லும் சத்யம் பயோ நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமார் இந்த மே தினத்தின் தொழிலாளர்களை மகிழ்ச்சி வைக்கும் வகையில் அவர் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தொழிலாளர்களை தனது சொந்த செலவில் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். மூன்று வேலை உணவுகள் அளித்து மீண்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்திலேயே அழைத்து வந்தார். இந்த நிகழ்வு இணையதளத்தில் வைரலாகி உள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.