மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல்நிலையம் அருகே உள்ள சாலையில் போக்குவரத்து காவலர்களான ஆல்வின் ஜெபஸ்டின், சின்ன கருத்தப்பாண்டி ஆகிய இருவரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதாக கூறியுள்ளனர்.   வாகனத்தில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி உள்ள தனது வாகனத்தை எப்படி நிறுத்தலாம் என கூறி காவலர்களிடம் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காவலர்கள் ஆல்வின் ஜெபஸ்டின் இளைஞரின் செயலை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் .

Watch Video: படுக்கை நிறைய ரூ.500 ரூ.2000 நோட்டுகள்... கட்டுக்கட்டாய் கட்டிலில் அடுக்கும் யார் இந்த சுஷில் குண்டு?

Murasoli : ”ஆளுநர் பேசவேண்டியது Rule Of Law தானே தவிர Rule Of Manu அல்ல..” : முரசொலி கடும் விமர்சனம்..

இதனை பார்த்த இளைஞர்கள் செல்போனை தட்டி விட்டதோடு செல்போனை பறித்துக்கொண்டு தனது வாகனத்தை விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தார். இதனையடுத்து இளைஞரின் பைக்கில் உருட்டியபடி இளைஞர் பின்னால் சென்று செல்போனை கேட்க, அவர் கொடுக்க மறுத்து கெத்துக்காட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் காவலரான கருத்தப்பாண்டி இளைஞரிடம் இருந்த செல் போனை திரும்பப் பெற்றதோடு இளைஞர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இதையடுத்து காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்து செல்போனை பறித்து சென்ற இளைஞரை பிடித்து விசாரித்தபோது அவர் மதுரை யானைகள் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவர் தெரியவந்தது . தல்லாகுளம் காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வசந்தனை போலீசார் கைது செய்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண