மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி இவருக்கு சொந்தமான 31 சென்ட் நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் கோசிமின் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை ஒச்சம்மாள் என்ற பெயரில் போலியாக ஆதாரை மாற்றி உசிலம்பட்டியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரம் பதிவு செய்துள்ளார். இதே போல் ஊரில் பல பேரின் ஆதாரை மோசடியாக பயன்படுத்தி இடத்தை பதிவு செய்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி கிராம மக்கள் மனு அளித்தனர்.
100 நாள் வேலை திட்டம் தொடர்பாக கையெழுத்து வாங்குவதாக கூறி பெண்களிடம் சட்ட விரோதமாக கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. அதே போல் பலரின் ஆதார் கார்டில் முறைகேடாக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க்ரைம் செய்திகள் படிக்க - அண்ணே பிஸ்கட் தீந்துபோச்சுன்னே.. திருட வந்துவிட்டு தண்ணியை குடித்துவிட்டு சென்ற திருடர்கள்.. இதுதான் காரணம்..
திம்மநத்தம் கிராமத்தில் உள்ள நீர் ஆதாரமாக இருந்த பகுதி, கோயில் நிலங்கள், இயற்கை வளங்க இருந்த இடங்களையும் முறைகேடாக கைப்பற்றியதாக புகார் தெரிவித்தனர். முறைகேடில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் கோசிமின் மற்றும் அவரது தாயார், சகோதரர் ஆகியோரும் முறைகேட்டில் ஈடுபட்டதால் அவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்