கடந்த சில தினங்களுக்கு முன்  மதுரையில் திருடச் சென்ற வீட்டில் இளைஞர் குடிபோதையில் குறட்டைவிட்டு உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிவகங்கையில் நகராட்சி பொறியாளர் வீட்டில் திருட்டு நகை பணம் கிடைக்காததால்  திருடர்கள் ஏமாற்றமடைந்து, திருட வந்துவீட்டில் தண்ணியை குடித்துவிட்டு சென்ற சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.








சிவகங்கை செந்தமிழ் நகரில் நவமணி தெருவில் வசிப்பவர் சிவகங்கை நகராட்சியில் பணியாற்றும் பொறியாளர் பாண்டீஸ்வரி இவரது சொந்த ஊர் பரமக்குடிக்கு சென்று விட்டு இரண்டு தினங்கள் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததுள்ளதை, கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் வீடு முழுவதும் தேடியும்  நகை பணம் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். வந்ததற்கு தண்ணீரை குடித்து விட்டு சொம்பை வாசலில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.

 




 

ஏமாற்றம் அடைந்த நிலையில்  அருகில் பூட்டி இருந்த பக்கத்து வீட்டிலும் கைவரிசை காட்டினர். ஆனால் அங்கும் பணம் நகை கிடைக்காததால் திருடர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர் புகாரின் பேரில் சிவகங்கை போலீசார் தடயங்களை சேகரித்து மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

”சிவகங்கை பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெறுவதை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே போல் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் குறித்த விபரமும், அவர்களின் தொடர்பு எண்களை சிவகங்கை எஸ்.பி ட்விட்டர் பக்கத்தில் தினமும் வெளியிடுகிறார். இதனை பொதுமக்கள் அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண