உசிலம்பட்டி அருகே கிராமத்தில் குற்றச் சம்பவங்களை குறைக்கும் நோக்கில் காவல்துறை வழிகாட்டுதலோடு, பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
குற்றங்கள் குறைக்க சி.சி.டி.வி
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் குற்றங்கள் பல்வேறு வகையில் அதிகரித்துள்ளது. இதனைக் கண்டறிய காவல்துறையினருக்கு சி.சி.டி.வி., மிகவும் உதவுகிறது. பல இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இருப்பதால் கூட குற்றங்கள் முழுமையாக தடுக்க முடிகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே கிராமத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் நோக்கில் காவல்துறை வழிகாட்டுதலோடு, பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை என குற்றங்கள் அதிகளவு ஏற்பட்டுவரும் நிலையில் இப்படியாக சி.சி.டி.வி அமைப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
உசிலம்பட்டி செட்டியபட்டி கிராமம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி கணவாய் இறக்கத்தில் அமைந்துள்ளது இக்கிராமம். தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள இக் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும், கிராமத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கவும் கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து காவல்துறை உதவியுடன் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க முடிவு செய்தனர்.
கிராமத்திற்கு வந்த புதிய சி.சி.டி.வி
இந்த இளைஞர்கள் தங்களால் இயன்ற நிதி மற்றும் கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் நிதி திரட்டி சுமார் 11 சி.சி.டி.வி கேமராக்களை பேருந்து நிறுத்தம், அரசுப் பள்ளி வளாகம் மற்றும் கிராமத்தின் முக்கிய வீதிகளில் பொருத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த கண்காணிப்பு கேமராக்களை உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சேகர், பால்ராஜ் இணைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து குற்றங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் கிராம மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.,
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?