இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் நடந்து வரும் விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதை ஆதரித்தனர். ஆனால், சிலர் அதைக் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்தனர். அதற்கு பதிலாக விஷத்தை விதைக்கத் தொடங்கினர், எமர்ஜென்சி காலம் காங்கிரஸுக்கு ஒரு களங்கமாக மாறியது. அது ஒருபோதும் போகாது" என்று அட்டாக் செய்தார்.
நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்ததும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியிடம் பிரதமர் மோடியின் பேச்சு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இரண்டு maths period சேர்ந்து இருந்தது போல் boring ஆக இருந்தது என கூறியுள்ளார். பிரதமர் மோடி புதிதாக எதுவுமே சொல்லவில்லை. அவர் பேசியது என்னை சில ஆண்டுகளுக்கு முன்பு அழைத்து சென்றது. அமைச்சர் நட்டாவும் கைகளை தேய்த்து கொண்டிருந்தார். ஆனால் பிரதமர் மோடி பார்த்ததும் அவரது பேச்சை உன்னிப்பாக கவனிப்பது போல் நடித்தார். அமைச்சர் அமித்ஷா அவரது கையை தலையிலேயே வைத்துவிட்டார். பியூஸ் கோயலும் தூங்கும் நிலைக்கே சென்றுவிட்டார். இதையெல்லாம் பார்க்க எனக்கு புதுமையாக இருந்தது. பிரதமர் மோடி புதிதாக எதாவது பேசுவார் என எதிர்பார்த்து நான் வந்திருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை” என விமர்சித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் இந்த பதிலை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ராகுல்காந்தியை போலவே பிரியங்கா காந்தியும் பாஜகவினரை கலாய்த்து வருவதாக கூறியுள்ளனர். மற்றொரு பக்கம் பிரியங்கா காந்தியின் பதில் பாஜகவினருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்ததால் தான் பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரியங்கா காந்தி பேசுவதாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.