உசிலம்பட்டி அருகே நீர் ஆதாரமாக உள்ள கண்மாயை 4 கிராம  பொதுமக்களின் பங்களிப்புடன் தூர்வாரும் பணியை உசிலம்பட்டி தொகுதியின் எல்.எல்.ஏ., அய்யப்பன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபட்டி அருகே அமைந்துள்ளது வளையன்குளம் கண்மாய். சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பூசாரிபட்டி, கோட்டையூர், வடக்கம்பட்டி, கேசவன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், 4 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த கண்மாய் விளங்கி வருகிறது.


 






சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக காணப்படும் இந்த கண்மாயை தூர்வார கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று உசிலம்பட்டி எம்.எல்.ஏ., நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 4 கிராம பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் தனது சொந்த செலவு என சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் இந்த கண்மாயை தூர்வார முடிவு செய்யப்பட்ட நிலையில்.,


உசிலம்பட்டி தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: அரசு பேருந்துகளுக்கு நடுவே சிக்கி நொறுங்கிய ஆட்டோ - 4 பெண்கள் படுகாயம்




நேற்று உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து பூமி பூஜை செய்து, கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை துவங்கி வைத்தனர். தொடர்ந்து உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 167 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் வழங்கினார்.




மேலும் இதுகுறித்து உசிலம்பட்டி பகுதி மக்கள் நம்மிடம் தெரிவிக்கையில், “உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் போதிய நீர் இல்லாததால் வறட்சி நிலவுகிறது. எனவே கண்மாய், குளங்களில் தண்ணீரை சேமிப்பது அவசியமாக இருக்கிறது. அதனால் வளையன்குளம் கண்மாயில் உள்ள  சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூர்வார முடிவு செய்தோம். அதனடிப்படையில் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ., ஐயப்பன் அவர்களிடமும் தெரிவித்தோம். பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ., இணைந்து தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கண்மாயை தூர்வாருவதால் பல்வேறு கிராமங்களுக்கு விவசாய பகுதிக்கும், கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் பயன்படும். மேலும் கண்மாயை சுற்றியுள்ள கிராங்களுக்கு போதுமான நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும் “ என தெரிவித்தனர்.


 


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: பெண் போலீஸை கொடூரமாக தாக்கிய நபர்; சுற்றி வளைத்து போட்டு தள்ளிய போலீஸ் - உ.பி.யில் அதிரடி


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அதிமுக - பாஜக இடையே மோதல் குறித்த கேள்விக்கு ; ஒரு காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும் என உதயநிதி பதில்