செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டி.டி.எப் வாசன் 7-வது நாளாக காவல்நிலையத்தில் கையெழுதிட்டார். காவல்நிலையத்திற்கு 20 நிமிடம் தாமதமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மதுரையில் டி.டி.எஃப் வாசன்


TTF Vasan: டி.டி.எஃப் வாசன் கடந்த மாதம் 15 -ம் தேதி அன்று மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்றார். அப்போது வண்டியூர் டோல்கேட் அருகே காரில் செல்போன் பேசியபடி, அஜாக்கிரதையாக காரை ஒட்டியதாக அண்ணா நகர் காவல் துறையினர் டி.டி.எஃப் வாசன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 6 -வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ”10 நாட்கள் தினசரி காலை 10 மணிக்கு அண்ணாநகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” - என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இன்று 7-வது நாளாக மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வருகை தந்து கையெழுத்திட்டார்.


- USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?


தாமதமாக வந்த டி.டி.எஃப் வாசன்


இந்நிலையில் காலை 10 மணிக்கு வருகை தர தாமதமாகி 10.20 மணிக்கு வருகை தந்ததால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து காவல் நிலையத்தில் தாமதத்திற்கான காரணம் குறித்து தெரிவித்துவிட்டு,  கையெழுத்திட்டு புறப்பட்டு சென்றார். முன்னதாக காவல் நிலையத்தின் அருகே இருந்த ஏராளமான ரசிகர்கள் வாசனுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Mettur Dam: ஜூன் மாதம் 12-ஆம் தேதி திறக்கப்படுமா மேட்டூர் அணை? டெல்டா விவசாயிகள் கூறுவது என்ன?


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?