தமிழ்நாடு டெல்டா மாவட்ட விவசாயிகளும் ஜீவ நதியாக விளங்கும் மேட்டூர் அணை கடும் வறட்சியால் காணப்படுகிறது. மேட்டூர் அணையில் மொத்த நீர் இருப்பு 93.47 டி.எம்.சி., நீர்மட்டம் 120 அடி தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். 



89 ஆண்டு நீர் திறப்பு:


மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் மாதம் 12 அன்று 18 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்னதாக 11 முறை திறக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக 60 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கடந்த 2022 ஆம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக இருந்த நிலையில் சுதந்திரத்திற்கு பின்னர் முதன்முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நீர் நிலுவை:


உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா, ஆண்டு தோறும் ஜூன் முதல் மே வரை தமிழகத்துக்கு, 177.25 டி.எம்.சி., வழங்க வேண்டும். கடந்த, 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், 2.83 டி.எம்.சி., ஜூலை மாதத்தில், 8.74, ஆகஸ்டில், 19.90, செப்டம்பரில், 13.58, அக்டோபரில், 12.84. நவம்பரில், 10.65, டிசம்பரில், 4, பின்னர் 2024 ஜனவரியில், 1.4, பிப்ரவரியில், 0.6, மார்ச்சில், 0.94, ஏப்ரலில், 0.43 என இதுவரை, 75.91 டி.எம்.சி., நீர் மட்டுமே கர்நாடகா மாநிலம் வழங்கியுள்ளது. இன்னும், 101.34 டி.எம்.சி., நீர் நிலுவை வைத்துள்ளது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் இருப்பு குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாகக் கூறி, தண்ணீர் தர முடியாது என கர்நாடகா மாநில அரசு தொடர்ந்து கூறி வருகிறது.


2023 நீர் திறப்பு:


கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் 16.5 லட்சம் ஏக்கர் வசனம் பெற்றது. நடப்பு ஆண்டில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பையொட்டி தமிழக அரசு சார்பில் 4061 கி.மீ தூர்வாரப்பட்டது. 



செல்டா விவசாயிகள் கருத்து:


மேட்டூர் அணை இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 124 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 46.11 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 15.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததாலும், தென்மேற்கு பருவமழை பொய்யாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரியா தொடங்கியது. இதனால் நடப்பு ஆண்டு டெல்டா பாசனத்திற்காக குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால் தமிழ்நாடு டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆனால் டெல்டா மாவட்டத்தில் 50 சதவீத விவசாயிகள் மட்டுமே இந்த முறை குருவை சம்பா சாகுபடி செய்துள்ளனர்.


மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் விவசாயிகள் விவசாயம் செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாமல் இருந்தாலும் கவலை இல்லை என ஒரு சில டெல்டா விவசாயிகள் கூறுகின்றனர்.


இது மட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் 11 கூட்டு குடிநீர் திட்டம் உட்பட தமிழகம் முழுவதும் 155 கூட்டு குடிநீர் திட்டங்கள் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் செயல்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவால் வரும் காலங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.