பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அழகர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் அழகர்கோயில் - கள்ளழகர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம்  வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர் கோவில் ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயிலில் மாதம்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை மாதம் நடைபெறக்கூடிய வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி உலகப்பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாளுக்கு ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாள் நாச்சியார் களுடன் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.








 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இன்று கொரோனா தொற்று தடை நீங்கியதைடுத்து, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.

 

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் அழகர் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை அதிகளவு செய்து வருகின்றனர்.