தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்


தேனி : பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி




முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிக்கிறது. இதை கண்டித்தும், இதற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் அடுத்த மாதம் 30ஆம் தேதி தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தப்படும். பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. காவிரியில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறது. கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.


மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..




தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது பேசுகையில், காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு அதிகாரமற்ற ஆணையம் என கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடக முதல்-மந்திரி ஒதுக்கீடு செய்திருக்கிறார். எனவே காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் மிக்க ஆணையமா?, இல்லையா? என்பது குறித்து முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். 


தேனி : பிரபலமான வீரபாண்டி அம்மன் கோவிலின் சிறப்புகள் தெரியுமா?




கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ததை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் இதை தடுத்து நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. வேளாண் தொழிலை லாபகரமான தொழிலாக மாற்றும் வகையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும். கொடைக்கானல் நகரில், இயற்கை வளங்களை அழித்து விட்டு பல சொகுசு விடுதிகள் கட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண