மதுரையில் சிறப்பு புஷ்பாஞ்சலி
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை அறிய, உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. இன்று நடைபெற உள்ள வாக்குப்பதிவில் வாக்களிக்க மொத்தம் 18.65 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் ஏற்கனவே 7 கோடி பேர் வாக்களித்துள்ளனர். தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 50 மாகாணங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட உள்ள, 538 பிரதிநிதிகளில் 270 பேரின் ஆதரவை பெறுபவர் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவர். கடந்த சில தேர்தல்களில் இல்லாத அளவில், இந்த தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றிபெற கோரி மதுரையில் சிறப்பு புஷ்பாஞ்சலி செய்து வழிபாடு.
சிறப்பு புஷ்பாஞ்சலி பிரார்த்தனை
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறை ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார். அதேபோல் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களமிறக்கப்பட்டு உள்ளார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியான தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குலசேகரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கமலஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மதுரை S.S.காலனி பகுதியில் உள்ள அனுஷனத்தின் அனுகிரகத்தின் சார்பில் அதன் நிறுவனர் நெல்லைபாலு தலைமையில் சிறப்பு புஷ்பாஞ்சலி பிரார்த்தனை நடைபெற்றது.
கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி தியானம்
அப்போது காஞ்சி பெரியவர் மற்றும் கிருஷ்ணர், காமாட்சி அம்மன், ராமர், முருகன் வள்ளி தெய்வானை, பெருமாள் சுவாமிகளுக்கும் வேதவிற்பனர்கள் வேதமந்திரங்கள் முழுங்க சுவாமிகளுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலி நடத்தினர். துணை அதிபர் கமலாஹாரிஸின் புகைப்படம் வைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கமலாஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக வேண்டியும் சுவாமிகளுக்கு தீபாரதனை காண்பித்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள பக்தர்கள் சுவாமிகள் முன்பாக அமர்ந்து கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டியும் தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Chinmayi : ராமன் ஒரு மோசமான புருஷன்..பாடகி சின்மயி கருத்திற்கு இந்துத்துவ அமைப்புகள் கண்டனம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Amaran : அமரன் படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்...மகிழ்ச்சியில் படக்குழுவினர்