அமரன்


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் அமரன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 800க்கும் மேற்பட்ட திரையரங்கில் அமரன் திரைப்படம் வெளியாகியுள்ளது , சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக பெட்ஜெட் மற்றும் இவ்வளவு பெரிய ரிலீஸ் என்பது இதுவே முதல்முறை. 


அமரன் படம் பார்த்து வாழ்த்திய முதலமைச்சர் முக ஸ்டாலின்


அமரன் படம் பற்றி பலர் பாசிட்டிவான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் இப்படத்தை தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினு பார்த்துள்ளார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் , இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ஆகிய மூவருடம் சேர்ந்து படம் பார்த்த முக ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.