கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 'மக்களில் சிலர் அரசு சொல்லும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விசயங்களை கடைப்பிடிக்காததால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பாதிப்பு அதிகரித்து வருகிறது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.


இமேஜ் - வெற்றிலை பாக்குடன் விழிப்புணர்வு


கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையைத் தாண்டி கோயமுத்தூர், நாமக்கல் என்று பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 



இமேஜ் - தண்டோரா விழிப்புணர்வு


 


மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மட்டும் 695 நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 15 முதல் நேற்றுவரை மொத்தம் 43542 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 27573 நபர்கள் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறான சூழலில் பலரும் விழிப்புணர்வு இன்றி ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றிவருகின்றனர். இந்நிலையில் மதுரையை  சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் இணைந்து உணவு, கபசுர குடிநீர், முககவசம், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் என வழங்கி வருகின்றனர்.

 


இமேஜ் - விழிப்புணர்வு


 


கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக  மதுரை செனாய்நகர், மதிச்சியம், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், பனகல்சாலை பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு அறிவித்துள்ள முழுஊரடங்கு குறித்தும், வீடுதேடி வரும் பலசரக்கு வாகனம் மற்றும் காய்கனிகள் வாகனம் குறித்தும், முககவசம் குறித்தும், நியாயவிலை கடைகளுக்கு செல்கையில் சமூக இடைவெளிக்கு  குடை பிடித்து செல்லும்படியாக பாரம்பரிய முறையான தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதில் கலாம்  சமூக நல அறக்கட்டளை நிறுவனர் மாயகிருஷ்ணன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் பாலமுருகன், மூர்த்தி, பாபு, ராஜா, கருப்பன்,கண்ணன், அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்த செயல் பலரது கவனம் ஈர்த்துள்ளது.


இது குறித்து அசோக்குமார். கூறுகையில், " கொரோனா முதல் அலையில் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இரண்டாவது அலையில் தீவிரமாக பணி செய்கிறோம். சாலையில் கிடக்கும் ஆதரவற்றோர்களுக்கு முடி வெட்டிவிட்டும், உடை வாங்கிக் கொடுத்தும் உதவி செய்துவருகிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு வைத்தும் முககவசம் அணிவது குறித்து எடுத்துரைத்தோம்.

 




அதே போல் கரடி பொம்பைக்கு மாஸ்க் அணிவித்து இருசக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இந்நிலையில் தற்போது தண்டோரா மூலம் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். நான் பள்ளி படிக்கும் போதே வீதி நாடகங்களில் நடித்துள்ளேன். அந்த அனுபவம் தற்போது கொரோனா விழிப்புணர்வுக்கு உதவுகிறது.

 


 

 

மைக் இல்லாமலே பாரம்பரிய முறைப்படி தண்டோரா சொன்னேன். இது என்னுடைய பள்ளி நினைவுகளை தூண்டியது. தொடர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மதுரை மக்களுக்கு நண்பர்களுடன் இணைந்து சேவையாற்றுவேன்,’’ என்றார்.