தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பெறவும், பொதுவிநியோகக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும். இது பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டையாகும். குடிமக்களுக்கான இந்த ரேஷன் அட்டையானது முன்பு பேப்பரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்ட் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடும்ப அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளியூர்களுக்கு கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்தும் மதுரை பொதுமக்கள் இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என எண் வெளியிட்டுள்ளனர்.


 






 

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மாநில சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தமிழக அரசு ஏழை எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.



 

 இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர்.  இவர்கள் பற்றியும் ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்தும் மதுரை பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் ரகசியம் காக்கப்படும் இதற்காக மாநில சிவில் சப்ளை சிஐடி போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  இது சென்னையில் இயங்கும் கூடுதல் டிஜிபி-ன் நேரடி கண்காணிப்பில்  செயல்படுகிறது.