மதுரை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாடியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகள் தின நிகழ்ச்சி கொண்டாட்டம்
மதுரை மாநகர் முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ்., காலனி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான கணேசன் - மனைவி பாக்கியலெட்சுமி தம்பதியினருக்கு கபிலன் (14) மற்றும் அகிலன் (10) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். தம்பதியினரின் இளைய மகனான அகிலன் (10) மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று, காலை தந்தை கணேசன் அகிலனை பள்ளியில் விட்டுவிட்டு ஆட்டோ ஓட்ட சென்றுள்ளார். இதனையடுத்து மாநகராட்சி பள்ளியில் நேற்று குழந்தைகள் தினம் என்பதால் குழந்தைகள் தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது பள்ளிக் கட்டிடத்தின் மேலே அமைந்துள்ள மொட்டை மாடி பகுதியில் ஆசிரியர்கள் முன்பாக மாணாக்கர்கள் ஸ்கிப்பிங், கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடியுள்ளனர். கபிலன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
போலீஸ் விசாரணை
இதில் தலையில் உள்புறம் காயம் ஏற்பட்ட நிலையில் மயக்க நிலையில் இருந்த அகிலனை ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனையடுத்து மாணவனின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் அளித்துள்ளனர். இதனிடையே மாணவன் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் பள்ளிக்கு நேரடியாக வந்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பள்ளி மாணவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என கூறியும், பாதுகாப்பற்ற பள்ளி கட்டிடத்தில் மாணவர்களை விளையாட அனுமதித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதுகாப்பற்ற கட்டிடத்தில் பள்ளியை இயக்கிவந்த மாநகராட்சியை கண்டித்தும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்க பள்ளியின் முன்பாக அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பேசிய மாணவனின் தந்தை கணேசன், “தனது மகனுக்கு நல்ல சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மொட்டை மாடியில் சிறிய அளவிற்கான பாதுகாப்பு சுவர் மட்டுமே உள்ள நிலையில் பாதுகாப்பாற்ற நிலையில் அப்பள்ளி உள்ளதன் காரணமாக ஆசிரியர்களின் அலட்சியத்தால் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எனது மகன் கீழே விழுந்துள்ளான். எனது மகன் மாடியில் இருந்து விழுந்து விட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆனால் பள்ளியில் என்ன நடந்தது என தெரியவில்லை, எனது மகனை எப்படியாவது நல்ல சிகிச்சை அளித்து மீட்டு தர வேண்டும்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்