கஞ்சா கடத்தல் வழக்கில் முன்னாள் காவலர் உள்ளிட்ட 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
தென் மாவட்டங்களில் தொடரும் கஞ்சா
தென் மாவட்டங்களில், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை அமோகமாக இருக்கிறது. கஞ்சா விற்பனையால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் முன்னாள் காவலர் உள்ளிட்ட 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
72 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023 - ஆம் ஆண்டு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் 72 கிலோவை கஞ்சாவை கடத்திவந்ததாக திண்டுக்கல் நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் காவலரான அருண்குமார் (48), சுரேஷ் (41), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யோகராஜ் (24), அஜித்குமார் (26) ஆகிய 4 பேரை திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய காவல்துறையின் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
12 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதம்
இந்நிலையில் இந்த வழக்கானது மதுரை மாவட்ட முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து. நீதிபதி ஹரிஹரக்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது 4 பேர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட நிலையில் முன்னாள் காவலர் அருண்குமார், சுரேஷ், யோகராஜ், அஜித்குமார் ஆகிய 4 நபர்களுக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து நான்கு பேரும் காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் கிடைக்கும் பச்சத்தில், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - “திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?