டேக்வாண்டோ பயிற்சி
டேக்வாண்டோ எனும் தற்காப்புக் கலை கொரியாவில் அறிமுகமாகி, தற்போது உலகில் பல நாடுகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கராத்தே பயிற்சியைப் போல் கற்றுக் கொள்ளப்படும் இந்த கலை தற்போது இந்தியாவிலும் அதிகளவு பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக மதுரையைச் சேர்ந்த 7 வயது சிறுமி கின்னஸ் உலக சாதனை செய்துள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.
சிறுவயதில் இருந்தே டேக்வாண்டோ பயிற்சி
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த விஜய் நாராயணன் மற்றும் ஸ்ருதி தம்பதியினரின் 7 வயது மகளான சம்யுக்தா சிறுவயதில் இருந்தே டேக்வாண்டோ பயிற்சி பெற்று கடந்த 2022 ஆம் ஆண்டு 5 வயதில் ஜம்பிங்ஜாக்ஸ் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது 7 வயதான சம்யுக்தா கொரியா நாட்டிலுள்ள உலக டேக்வாண்டோ தலைமையகத்தால் சரிபார்க்கப்படும், அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் 270 நாட்களில் கேட்கப்பட்ட அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும், குறைந்த வயதில் செய்து காட்டி உலக சாதனைக்கு தகுதி பெற்றுள்ளார். கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
உலகின் இளம் வயது கின்னஸ் சாதனையாளர்
இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த சாதனை படைக்க, அந்த நபர் அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகச் சரியாக செய்து காட்ட வேண்டும் மற்றும் பிற மாணவர்களுக்கு குறைந்தது 50 மணிநேர டேக்வாண்டோ வகுப்புகளை எடுத்திருக்க வேண்டும். இதை பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற விதிமுறைப்படி அனைத்தையும் கற்றுக்கொண்டு நிகழ்த்திகாட்டி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார், 7வயது சிறுமி சம்யுக்தா. டேக்வாண்டோவில் உலகின் இளம் வயது கின்னஸ் சாதனையாளர் என்ற சாதனையைப் படைத்ததற்காக சம்யுக்தாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக உருவாகி சாதனை
மதுரை டேக்வாண்டோ அகாடமியின் தலைமைப் பயிற்சியாளரும் மென்பொறியாளரான விஜய் நாராயணன் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி ஆகிய இருவரும் டேக்வாண்டோவில் பல்வேறு கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ள நிலையில் அவர்களது 7 வயது மகளான சம்யுக்தா 2ஆவதாக கின்னஸ் உலக சாதனைபடைத்து உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளராக உருவாகி சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து சிறுமி சம்யுக்தாவின் தந்தை பயிற்சியாளர் விஜய் நாராயணன் கூறுகையில், "நானும் என் மனைவியும் இணைந்து பல்வேறு கின்னஸ் சாதனை செய்துள்ளோம். அதே வரிசையில் என் மகளும் உலக சாதனை படைத்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - டாஸ்மாக்கில் இனி ‘நோ எக்ஸ்ட்ரா பைசா’...இன்று முதல் இது கிடையாது.. மதுபிரியர்களே என்ஜாய்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Kanguva movie : காலையிலே சோகம்.! கங்குவா பார்த்து நொந்து போன சூர்யா ரசிகர்கள்.. நீங்களே பாருங்க!