ஆர்.பி.உதயகுமார்


 

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்...,” வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த மூன்று மாதங்களிலும் தமிழ்நாட்டிற்கு தொடர்மழை, கனமழை போன்ற மழைப்பொழிவு கிடைக்கக்கூடிய பருவ காலமாகும். இந்த மூன்று மாத காலங்களிலே அக்டோபர், நவம்பர், டிசம்பர் மழை நீர் பருவ காலத்திலே அந்த மழை நீரை சேமித்து வைப்பதற்கும், தொடர் மழை, கனமழை வருகிற போது அதிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு நிவாரண உதவியை வழங்குவதற்கும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார்.  

 


 

முதலமைச்சர் பதவிக்கு அழகு அல்ல


மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று வாயாலே வடை சுடுகிறார்கள். ஆனால் களப்பணியில் பூஜ்ஜியமாக உள்ளார்கள். தற்போது பெய்யும் கனமழையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது ஆனால் திமுக அரசு போர்க்கால அடிப்படையில் தாலுகா வாரியாக, ஊராட்சி வாரியாக குழுக்களை அமைக்கவில்லை. அதேபோல் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து கூடுதல் கவனத்தை  பேரிடர் மேலாண்துறை கவனம் செலுத்த வேண்டும். உணவு, தங்குமிடம், மின்சாரம் ஆகியவை கண்காணிக்க வேண்டும் தற்போது பருவமழை காரணமாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது இதற்கெல்லாம் மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் இல்லை. மரியாதைகுரிய  தலைவர் ஒரு கேள்வி கேட்டால் அவர்களுக்கு வேலை வெட்டி இல்லை அதனால் அறிக்கை கொடுக்கிறார்கள் என்று முதலமைச்சர் அடாவடியாக பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகு அல்ல. இன்றைக்கு முதலமைச்சர் சொல்வதும், அறிக்கையில் கொடுப்பதும் பார்த்தால் ஏட்டிக்கு போட்டியாக களத்தில் உள்ளது.

 

அநாகரிகமான அரசியலுக்கு எடுத்துக்காட்டாகும்


 

இன்றைக்கு தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருக்கிறது இதனால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை விடப்பட்டிருக்கிறது, சிவகங்கை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தெற்கு வங்க கடல் மற்றும் பூமத்தியரேகையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியிலே நிலை கொண்டிருக்கிறது. இன்று வடமேற்கு திசையில் தமிழகம் இலங்கையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வழிவடையும் அதாவது காற்றுக்கு தாழ்மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இது புயல் சின்னத்திற்கு முந்திய நிலையை நாம் பார்க்கிறோம். தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக தமிழகத்தினுடைய கடலோர மாவட்டங்களில அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று எச்சரிக்கின்றார்கள். மக்களின் வயிற்றெரிச்சலை திசை திருப்ப பொறாமை என்று கூறுவதும், கேலியாக பேசுவதும், நையாண்டி பண்ணுவதும், முதலமைச்சர் பேசுவது அநாகரிகமான அரசியலுக்கு எடுத்துக்காட்டாக அமையும்” என்றார்.