Savings Tips: சுவிட்சர்லாந்தில் நாம் காணும் ஏழு பேரில் ஒருவர் கோடீஸ்வரராக இருப்பார் என தரவுகள் தெரிவிக்கின்றன.
கோடீஸ்வரர்கள் நிறைந்த சுவிட்சர்லாந்து:
சுவிட்சர்லாந்து ஒரு அழகிய ஆல்பைன் தேசம். அதன் அழகிய சுற்றுலாத் தலங்களுக்கு மட்டுமின்றி, குறிப்பிடத்தக்க உலகளாவிய நிதி மையமாகவும் கவனத்தை ஈர்க்கிறது. ஏராளமான கோடீஸ்வரர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நிலையில் டிவிட்டர் தளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், "சுவிட்சர்லாந்தில், நீங்கள் காணும் 7 பெரியவர்களில் ஒருவர் கோடீஸ்வரராக இருப்பார். இது அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகம். அவர்களின் செல்வத்தைக் கட்டியெழுப்பும் ரகசியங்களை இங்கே வெளிப்படுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதன்படி, சுவிட்சர்லாந்தின் விதிவிலக்கான செல்வத்தை கட்டியெழுப்பும் திறமைக்கு என்ன காரணம்? என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் விளக்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்து பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்:
டிவிட்டர் பதிவின்படி,
- சுவிட்சர்லாந்தில் உலகிலேயே அதிக சதவிகித கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
- சுவிட்சர்லாந்தில் நீங்கள் காணும் ஒவ்வொரு 80,000 பேரிலும் 1 பில்லியனர் (பெரும் பணக்காரர்) இருப்பார்
- சுவிட்சர்லாந்தில் சுமார் 14.9% அடல்ட் (18 வயதை கடந்தவர்கள்) கோடீஸ்வரர்களாக உள்ளனர்
- சுவிட்சர்லாந்தில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அமெரிக்காவை (8.8%) காட்டிலும் சுமார் 2 மடங்கு அதிகம்
- இருந்தபோதிலும் தனிநபரின் சராசரி வருவாயில் முதல் 10 இடங்களில் கூட சுவிட்சர்லாந்து இடம்பெறவில்லை
- சுவிட்சர்லாந்து மக்கள் சொந்த வீடுகளை காட்டிலும் வாடகைக்கு இருப்பதை விரும்புகின்றனர்
- கோடீஸ்வரர்கள் கூட சொந்த வீடுகளை வாங்கி குவிப்பதை விரும்புவதில்லை
- சுவிட்சர்லாந்தில் 41% மக்கள் மட்டுமே சொந்த வீடுகளை கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அமெர்க்காவில் 65%
சுவிட்சர்லாந்து மக்களின் சேமிப்பு உத்திகள்:
சுவிட்சர்லாந்து மக்கள் வீடுகளை வாங்குவதை காட்டிலும் அதிக லாபம் தரக்கூடிய பலதரப்பட்ட சொத்துக்களில்முதலீடு செய்கின்றனர். அதன்படி,
- பெரும்பாலானோர் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை சேமிப்பார்கள். ஆனால், சுவிட்சர்லாந்து மக்கள் சேமிப்பு போக மீதமுள்ள பணத்தை தான் செலவழிக்கின்றனர்
- வருமானத்தை தொடுவதற்கு முன்பாகவே அதில் 20-30 சதவிகித பணம் தானாகவே (ஆட்டோமேடிக் முறையில்) சேமிப்பு கணக்கிற்கு செல்லும் வகையில் திட்டமிடுகின்றனர்
- சேமிப்பை முடியும் என செய்யாமல், அதனை ஒரு அமைப்பாகவே மாற்றியுள்ளார்
- சுவிட்சர்லாந்து மக்கள் தங்கள் வருமானத்தில் 5-10% கல்வி மற்றும் திறன்களுக்காக செலவிடுகிறார்கள்.
- ஒவ்வொரு வருடமும், அவர்கள் பட்டங்களைத் துரத்தவில்லை. மாறாக குறிப்பிட்ட உயர் மதிப்பு திறன்களை பெற முயற்சி செலுத்துகிறார்கள்
- மொழிகள், தொழில்நுட்ப திறன்கள் மற்றும் நிதி கல்வியறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள்
சுவிட்சார்லாந்து மக்களின் பல வங்கி உத்தி:
சுவிட்சர்லாந்து மக்கள் பல வங்கி கணக்கு உத்தியை திறம்பட பயன்படுத்துகின்றனர். அதன்படி, அவர்கள் தங்களது பணத்தை ஒரே வங்கியில் அல்லாமல், பலதரப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு 3 முதல் 5 வங்கிக் கணக்குகளை பயன்படுத்துகின்றனர்.
- தினசர் நிதி பயன்பாட்டிற்காக உள்ளூர் வங்கி
- நிதி மேலாண்மைக்காக தனியார் வங்கி
- அந்நிய செலாவணிக்காக வெளிநாட்டு வங்கி
இதன் மூலம் ஆபத்துகள் குறைக்கப்பட்டு, நிதியை பெருக்குவதற்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமான சலுகைகள் வழங்கப்படுவதை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். உதாரணமாக, ஒரு வங்கி ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கலாம், மற்றொன்று சர்வதேச வர்த்தகத்தில் சிறந்து விளங்கும். இது ஒவ்வொரு வங்கியின் தனிப்பட்ட நன்மைகளைப் பயன்படுத்துவதாகும்.
ஆடம்பரத்துக்கு ”நோ”
சுவிட்சர்லாந்து கோடீஸ்வரர்கள் டிசைனர் லோகோக்களையோ அல்லது கவர்ச்சியான கார்களையோ காட்டுவதை நீங்கள் பார்க்க முடியாது. அவர்கள் தங்கள் வசதிக்குக் கீழே வாழ்கிறார்கள் மற்றும் லாபத்தை மீண்டும் முதலீடு செய்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்கள் எல்லைகளுக்கு அப்பால் சிந்திக்கிறார்கள். சொத்துக்களில் மட்டுமல்ல, குடியுரிமை மற்றும் கவசிப்பிடம் ஆகியவற்றிலும் உலகளவில் பல்வகைப்படுத்துகிறார்கள். பலருக்கு இரண்டாவது பாஸ்போர்ட் அல்லது பிற நாடுகளில் வசிப்பிடங்கள் உள்ளன. ஏனெனில் இது அதிக நிதி வாய்ப்புகள் மற்றும் வரி மேம்படுத்தல்களைத் திறக்கிறது.
நிலையான வளர்ச்சி:
.சுவிட்சர்லாந்தில் பணக்காரர் ஆவது என்பது உடனடி திட்டங்கள் இல்லை. அவர்கள் தலைமுறைக்கான செல்வத்தை உருவாக்குகிறார்கள். உண்மையான செல்வம் என்பது பணம் சம்பாதிப்பது அல்ல. அதை வைத்து வளர்ப்பதுதான் என்பதை உணர்ந்து செயல்படுத்துகின்றனர். எனவே, சுவிட்சர்லாந்து மக்களிடம் இருந்து கற்க வேண்டியது என்னவென்றால்,
- தானியங்கி முறையில் சேமிப்புகளை மேற்கொள்ளுங்கள்
- உங்கள் வசதியை காட்டிலும் குறைவான வாழ்க்கயை பின்பற்றுங்கள்
- அதிக மதிப்புள்ள திறன்களில் முதலீடு செய்யுங்கள்
- நீண்ட கால முதலீட்டிலும், சர்வதேச அளவிலும் சிந்தியுங்கள்
- எல்லைகளை தாண்டி முதலீடுகளை வங்கிகளில் பிரித்து செலுத்துங்கள், இந்த உத்திகள் உங்களையும் பணக்காரராக்கலாம்” என அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.