தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பரவலாக பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
தென்தமிழகத்தில் அநேக இடங்களில், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம்
மதுரை மாவட்டம் முழுவதிலும் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பரவலான மலை பெய்த நிலையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் உள்ள வி கே பி நகர், எல்லிஸ்நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் கடும் சிரமமடைந்துள்ளனர். மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
பக்தர்கள் கடும் அவதி
மதுரை எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் மழைநீர் தேங்கியதால் மீனாட்சியம்மன் கோயில் வாகன நிறுத்துமிடத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரக்கூடிய பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி - ஒவ்வொரு மழைக்கும் எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும் பக்தர்களும் சிரமத்திற்கு ஆளாவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையடைந்துள்ளனர்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
அந்தமான் கடற்கரைக்கு அருகே வரும் 15ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதன் நகர்வைப் பொறுத்து தமிழ்நாட்டில் மழை இருக்குமா என்று தெரிய வரும்’’ என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
பனி மூட்டம் ஏன்?
மேலும் அவர் கூறும்போது, ‘’காற்றின் அதிக ஈரப்பதம் காரணமாக, ஆங்காங்கே பனி மூட்டம் காணப்படுவதாகவும் மழை பெய்த பிறகு அது மறைந்துவிடும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!