மதுரை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 13-12-2024 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளர் ரா.கண்ணன் குறிப்பிட்டுள்ளபடி நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை பார்க்கலாம்.
மின்விநியோகம் தடைப்படும் ஊர்களின் பெயர்கள்:
நாட்டார்மங்கலம்
நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?