மதுரை மாநகர தி.மு.க., செயற்குழு கூட்டம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 



 

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இரண்டாவது முறையாக தி.மு.கவின் தலைவராக தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தும், தேவர் ஜெயந்தி விழாவிற்கு மதுரை வழியாக பசும்பொன் வருகைதரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பது அளிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சிபூசல் குறித்து நிதியமைச்சர் பேசி பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஒரே மேடையில் மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் நிதியமைச்சர் கலந்து கொண்டு கட்சி கூட்டத்தை நடத்தினர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிதியமைச்சர் பேசுகையில், “யாரும் எந்தவொரு தனிநபர் அரசியலும் செய்யக்கூடாது, எல்லோரும் விவாதித்து முடிவு எடுத்தாலும் தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவது தான் சிறப்பான குணம். எனது  குடும்பம் தலைமுறை தலைமுறையாக அரசியலில் கொள்கையையும் நிலைப்பாட்டையும் மாற்றாமல் உள்ளோம்.



 

தலைவர்களில் புரட்சித்தலைவர் என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் , என்னைப்போன்ற அடிப்படை தொண்டருக்கு கூட நிதியமைச்சர் பதிவி வழங்கியுள்ளார். அடிப்படை தொண்டனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு கொடுத்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துள்ளார். அடிப்படை தொண்டனுக்கு பதவி கொடுத்து ஊக்கப்படுத்தும் ஒரே தலைவர் நம் முதல்வர் தான். கழகத்தொண்டர்களுக்கும் நிரேவாகிகளுக்கும் என் வீட்டில் கேட்(கதவு) போடவில்லை. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வரலாம். விருந்தினராக வரலாம் என் வீட்டு கேட் எப்போதும் தொண்டர்களுக்காக திறந்தே இருக்கும் யார் எப்போதும் வேண்டுமானாலும் வரலாம்" என்றார்.