மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சகோதரர்கள் திருமன், அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று மாலை வலையங்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் டீக்கடை முன்பு டீ, வடை சாப்பிட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது வலையங்குளம் பெருமாள் நகர் பகுதியில் சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பல் மது மற்றும் கஞ்சா போதையில் வருகை தந்து சாலையை மறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. 


 





இதனை கண்ட சகோதரர்கள் மற்ற வாரங்கள் செல்ல வழி விடுமாறு கேட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு கஞ்சா மற்றும் மது போதையில் வந்த கும்பல் கட்டிட தொழிலாளி சகோதரர்களை தாக்கியுள்ளனர். திடீரென பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சகோதரர்கள் திருமன், அழகுராஜா ஆகிய இருவரையும் பட்டாகத்தி, அரிவாள் மற்றும் வால் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் வெட்டுக்காயத்தில் இருந்த இருவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



 


 

மேலும்., அந்த 9 பேர் கொண்ட போதை கும்பல் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்துள்ளனர்.  கையில் அருவாள் பட்டாகத்தி மற்றும் வால் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மதுரை தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் அவர்களுடைய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வலையங்குளம் பகுதியில் சகோதரர்களை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு திருமங்கலம் டி.எஸ்.பி வசந்தகுமார் பெருங்குடி ஆய்வாளர் லெஷ்மி லதா ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வலையங்குளம் பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் வினோத் (23 )அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமார் (23) நாகராஜ் மகன் வைரமுத்து (22) வலையப்பட்டியைச் சேர்ந்த முனியசாமி மகன் சஞ்சய் குமார் (22) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது சேர்த்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய 5 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.