சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மூன்றரை லட்சம் பக்தர்கள் அதிகமாக தரிசனம் செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள பிரிசித்திபெற்ற கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சீசன் நேரங்களில் மட்டுமல்லாமல் பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்கான சீசன் தொடங்கியதையொட்டி பல்வேறு மாநிலத்திலிருந்து  லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டும் அதிகரித்து உள்ளது.

Continues below advertisement

Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை

Continues below advertisement

இதுவரை 19 லட்சம் பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துள்ளனர்.நடப்பு மண்டல, மகரவிளக்கு பூசைகளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இவ்வாண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கத்தைவிட வயதான பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வருகை இவ்வாண்டு 30 விழுக்காடாக அதிகரித்து உள்ளது.

மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது!

இதையொட்டி 18ஆம் படியில் காலதாமதத்தைக் குறைக்க தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தப் பருவத்தில் செவ்வாய்க்கிழமை வரை 19 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாளைக்கு 80,000 முதல் 90,000 வரையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 7) அதிகபட்சமாக 89,840 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே நாளில் சாமி தரிசனம் செய்தவர்களைவிட இந்த எண்ணிக்கை மூன்றரை லட்சம் அதிகம்.

அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?

மண்டலப் பூசைக்கு இணையத்தில் முன்பதிவு முடிந்த நிலையில் உடனடி தரிசன முன்பதிவு மூலம் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாள்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் பிரசாதமாக வழங்கப்படும் அப்பம் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சாமி தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனடியாக மலையிறங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் வலியுறுத்தி உள்ளது.