ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பகுதிகள் செல்-தெளிவுத் திறனில் டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் இந்தப் பணிகளை முன்னெடுத்துள்ளது.
சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்
அறிவியல், தொழில்நுட்பம், கணினி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பெரிய அளவிலான பல்துறை முயற்சியை ஆற்றுவதற்கும், மனித மூளையை செல்லுலார் அளவில் வரைபடமாக்குவதற்கும் 2022-ல் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம், அதிநவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டது.
இங்கு உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பிரிவுகள் டிஜிட்டல் முறையில் பெறப்பட்டுள்ளன. இந்தப் பணியால் நரம்பியல் துறை மேம்படுத்தப்படுவதுடன், மூளையைப் பாதிக்கும் உடல்நிலைக்கான சிகிச்சையின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
குறைந்த செலவில் நடைபெற்ற ஆய்வு
இத்தகைய மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட தொகையைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ருமேனியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த மெடிஸ்கேன் சிஸ்டம்ஸ், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவையும் இணைந்து இந்த ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ளப்பட்டது.
உலகெங்கும் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில், இதன் தரவுத் தொகுப்பான ‘தரணி’யை (DHARANI) ஓபன் சோர்ஸ் முறையில் பின்வரும் இணைப்பில் காணலாம் (https://brainportal.humanbrain.in/publicview/index.html)
என்ன பயன்?
கருவில் இருந்து குழந்தைப் பருவம், வளரிளம் பருவம், இளமைப் பருவம் வரை மூளை வளர்ச்சியையும், கற்றல் குறைபாடுகள், மனஇறுக்கம் போன்ற வளர்ச்சிக் குறைபாடுகளையும் புரிந்து கொள்வது நாட்டிற்கு மிகவும் அவசியமாகிறது.
தற்போதைய கரு இமேஜிங் தொழில்நுட்பங்கள், ஆரம்பகால நோயறிதல், வளர்ச்சிக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவை இத்தகைய உயர் தெளிவுத்திறன் கொண்ட மூளைப் படங்களை உருவாக்குவதன் முக்கிய பயன்பாடுகளாகும்.
இந்த ஆராய்ச்சியின் முக்கியத்தை விவரித்த ஜர்னல் ஆஃப் கம்பேரேட்டிவ் நியூராலஜி இதழின் ஆசிரியர் குழுத் தலைவரான சுசானா ஹெர்குலானோ-ஹவுசல், “மனிதக்கருமூளைபற்றிபொதுவில்அணுகக்கூடியமிகப்பெரியடிஜிட்டல்தரவுத்தொகுப்புதான்பரணி. 2020-2022 ஆண்டுகளில்கோவிட்தொற்றுக்காலத்தில்இந்தியாவிற்கானதனிப்பயனாக்கப்பட்டதொழில்நுட்பத்தளத்துடன்இதுஉருவாக்கப்பட்டது. ஆலன்பிரைன்அட்லஸ்-க்குசெலவிடப்பட்டதொகையுடன்ஒப்பிடுகையில்பத்தில்ஒருபங்குதான்செலவிடப்பட்டுள்ளது.
ஆலன்பிரைன்இன்ஸ்டிடியூட்உடன்ஐஐடிமெட்ராஸ்இணைந்துசெயல்பட்டு, அமெரிக்காவுடன்மனிதமூளைவரைபடஅட்டவணையில்இந்தியாஇணைகிறது. அங்குமனிதமூளையைஉருவாக்கும்கட்டமைப்புகள்பற்றிகிடைக்கக்கூடியஅறிவைமனிதகுலத்திற்குஇலவசமாகக்கிடைக்கக்கூடியஅட்லஸ்களைவழங்கபெரியதொகைமுதலீடுசெய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.
