Madurai power shutdown: மதுரை மாநகர் பகுதிகளில் நாளை (01.02.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

 

மின் செயற்பொறியாளர் தகவல்

 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகம் சார்பில் மின் விநியோகம் நிறுத்தம் தொடர்பாக நாளை 01.02.2025 சனிக்கிழமை, காலை 09.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் கீழ்கண்ட பகுதிகளில் ஏற்பட இருக்கும் மின்தடை குறித்து மதுரை வடக்கு மின் செயற்பொறியாளர், எஸ்.ஆர். ஸ்ரீராம் தகவல் வெளியிட்டுள்ளார். 

 


 

மின் தடை ஏற்படும் பகுதிகள்

 

பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர் சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லாஜபாதிராய்ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, LDC ரோட்டின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு,  AIR குடியிருப்பு, நியூ DRO காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு (EB குவாட்ர்ஸ் முதல் கண்ணா மருத்துவமணை வரை), ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரோஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவகர் புரம், திருவள்ளுவர் நகர், அழகர் கோவில் ரோடு ( ITI பஸ்டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை ) டீன் குவார்ட்ஸ், காமராஜர் நகர், 1,2,3,4, ஹச்சகாண் ரோடு, கமலா முதல் மற்றும் இரண்டாவது தெரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மஹால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேல தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கனகவேல்நகர், பழனிச்சாமிநகர், ஆத்திகுளம், குறிஞ்சிநகர், பாலமிகுடியிருப்பு, கனகவேல் நகர், பழனிச்சாமி நகர், சுற்றியுள்ள பகுதிகளாகும்.